சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகனுக்கு சூடு வைத்த தாய் கள்ளக்காதலனுடன் கைது

Added : செப் 08, 2021
Share
Advertisement
கடலுார் : கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மகனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தாயை, கள்ளக் காதலனுடன் போலீசார் கைது செய்தனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் 12 வயது மகன் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 7ம் வகுப்பு படிக்கிறார். கொரோனா ஊரடங்கால் பள்ளி விடுமுறை என்பதால்

கடலுார் : கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மகனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தாயை, கள்ளக் காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் 12 வயது மகன் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 7ம் வகுப்பு படிக்கிறார். கொரோனா ஊரடங்கால் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் உள்ளார். இந்நிலையில் அப்பெண் சிதம்பரத்தைச் சேர்ந்த சித்த வைத்தியர் சுகையில் அகமது, 40; என்பவரிடம் வைத்தியம் பார்க்க சென்ற போது பழக்கம் உண்டாகி கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அப்பெண்ணின் வீட்டிற்கு சுகையில் அகமது அடிக்கடி வந்து சென்றார். இதனை தட்டிக் கேட்ட சிறுவன், தாயின் கள்ளக் காதல் விவகாரத்தை, அருகில் வசிப்பவர்களிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அப்பெண் கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மகனுக்கு கள்ளக் காதலனுடன் சேர்ந்து அடிக்கடி சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் அப்பெண் வீட்டிற்கு சுகையில் அகமது வந்துள்ளார். எதற்காக இங்கு வந்தீர்கள் என சிறுவன் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த தாய் மற்றும் சுகையில் அகமது சேர்ந்து சிறுவனை இரும்பு ஊதாங்குழலால் தாக்கி சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

வலி தாங்க முடியாமல் அலறிய சிறுவன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தான். அவ்வழியாக சென்றவர்கள் நடந்த சம்பவம் குறித்து கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சென்று, கள்ளக்காதலர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து வி.ஏ.ஓ., அன்பரசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்தனர். சிறுவனை கடலுார் சீர் திருத்தப் பள்ளியில் போலீசார் ஒப்படைத்தனர். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து தாய் சூடு வைத்து சித்ரவதை செய்த சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X