இயற்கை பொருளால் விநாயகர் சிலை தயாரிக்க சத்குரு வேண்டுகோள்

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (37) | |
Advertisement
கோவை : விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை, இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டுமென, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.சத்குரு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது: உலகின் பல இடங்களிலும், விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கியப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின்போது நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை, மண்,
Isha Yoga, Sadhguru, Jaggi Vasudev,Isha

கோவை : விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை, இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டுமென, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

சத்குரு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது: உலகின் பல இடங்களிலும், விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கியப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின்போது நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை, மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூல பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும்.

விநாயகர் சூழலுடன் மிகுந்த நட்புறவான கடவுள். எந்த மண்ணில் இருந்து உருவெடுத்தாரோ அதனுள்ளேயே மீண்டும் கரைந்திட விரும்புகிறார். அவர் கரைந்து போக இயற்கையான பொருட்களால் அவர் உருவம் உருவாக்கப்பட வேண்டும்.


latest tamil news


பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பானைகள் செய்வதை போல் சுடு மண்ணில் தயாரித்தாலும், அதை கரைக்க முடியாது. சிலையின் மீது செயற்கை வர்ணங்களை பூசினால், அது நீரை மாசுபடுத்தும். எனவே, நீரில் கரையும் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு மட்டுமே விநாயகர் சிலையை தயாரித்து, இந்த விழாவை கொண்டாட வேண்டும்.

ஒரு கடவுளை உருவாக்கி, அதை நீரில் கரைக்கும் சுதந்திரத்தை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை நமக்கு வழங்குகிறது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். நம் கலாசாரத்தை பாதுகாப்பதற்கும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கும், இதுவே சிறந்த வழி.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
08-செப்-202113:28:13 IST Report Abuse
Visu Iyer சத்குரு என்பது இவர் பெயர் அல்ல.. பல்கலை கொடுத்த பட்டமும் இல்லை அப்படின்னா இந்த பெயரை வைத்து இவரை அழைப்பது எப்படி சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். என்று யாருக்குமே கேட்க தோன்றவில்லையா.
Rate this:
08-செப்-202114:50:17 IST Report Abuse
ஆரூர் ரங்காசா பணமா? கொடுப்பதைக் கொடுத்தால் வித்தவுட்😎 டிக்கெட்டில் வந்தவன் கலைஞனாகலாம் . ராணுவத்தில் சேராமலே நோஞ்சான் நோயாளி கூட தளபதி😷 ஆகலாம். TUTORIAL காலேஜில் வேலை பார்த்தவன் பேராசிரியர்😄 ஆகலாம்.. அடுத்தவர் மனைவியுடன் ....ஆட்டையை போட்டவன் ஆசிரியராகவும் ஆகலாம். இது திராவிஷ டெக்னிக் .சிரியார மண்ணு ....
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
08-செப்-202118:28:59 IST Report Abuse
RAVIKUMARஆரிய ரெங்குடு .....நீ இன்னும் இதே தான் கூவிக்குனுகிரியா ?.. இன்னைக்கு full ah இந்த உருட்டுதானா ?.. ஆனா இந்த உருட்டுக்குதான் இங்க வரவேற்பு ,..நடத்து ....நல்ல நடத்து .....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
08-செப்-202113:22:01 IST Report Abuse
Visu Iyer கொரானா வந்தால் மட்டும் அல்ல.. தீயவர்களை கண்டால் கூட விலகியே இருக்க வேண்டும் என்று தான் தமிழ் சொல்கிறது..
Rate this:
Suresh Kumar - Salem,இந்தியா
08-செப்-202116:01:40 IST Report Abuse
Suresh Kumarபரவாயில்லையே, உங்களையே நீங்கள் உணர்ந்துவிட்டிர்கள்.....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
08-செப்-202113:17:05 IST Report Abuse
Visu Iyer தீயாரைக் காண்பதுவும் தீதே திருஅற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது - ஒளவையார் அருளிய மூதுரை இவர்களை விட்டு விலகியே இருங்கள்... ஆபத்தானவர்களை விட்டு விலகி இருப்பது தான் அறிவுடைமை
Rate this:
Suresh Kumar - Salem,இந்தியா
08-செப்-202116:03:45 IST Report Abuse
Suresh Kumarஆம், Visu ஐயர் போன்றவர்களின் கருத்துக்களை விட்டு விலகி இருப்பது தான் அறிவுடைமை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X