பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்த்தி 'ஸ்கேன்ஸ்' நிறுவனத்தில் அதிநவீன தொழில்நுட்பம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
வடபழநி : ஆர்த்தி 'ஸ்கேன்' மற்றும் 'மயின்ட்ரே' இந்தியா நிறுவனம் இணைந்து, நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக, பரிசோதனை திறன்களை விரிவுபடுத்தி உள்ளன.சென்னையில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மற்றும் லேப், 2000ல் துவங்கப்பட்டது. இந்நிறுவனம், மயின்ட்ரே இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்தில் 'இமேஜிங்' நடைமுறையில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக,

வடபழநி : ஆர்த்தி 'ஸ்கேன்' மற்றும் 'மயின்ட்ரே' இந்தியா நிறுவனம் இணைந்து, நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக, பரிசோதனை திறன்களை விரிவுபடுத்தி உள்ளன.

சென்னையில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மற்றும் லேப், 2000ல் துவங்கப்பட்டது. இந்நிறுவனம், மயின்ட்ரே இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்தில் 'இமேஜிங்' நடைமுறையில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக, பரிசோதனை திறன்களை விரிவுபடுத்தியுள்ளன. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு, வடபழநியில் நேற்று நடந்தது.இதில், மயின்ட்ரே இந்தியா நிறுவன இயக்குனர் அஸ்வனி ரெய்னா, அந்நிறுவனத்தின் ரேடியோலஜி தயாரிப்பு மேலாளர் எம்.சி.ஏகாம்பரம், ஆர்த்தி ஸ்கேன் நிறுவனர் கோவிந்தராஜன், மருத்துவ இயக்குனர் டாக்டர் பிரசன்னா விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.ஆர்த்தி ஸ்கேன் நிறுவனர் கோவிந்தராஜன் கூறியதாவது:

ஆர்த்தி ஸ்கேன், 10 மாநிலங்களில், 40 எம்.ஆர்.ஐ., பிரிவுகளுடன் செயல்படுகிறது. நியாயமான விலையில், உயர்தர மற்றும் நம்பகமான மருத்துவ பகுப்பாய்வு படமெடுத்தல் மையமாக ஆர்த்தி ஸ்கேன் விளங்குகிறது. இதற்கு மயின்ட்ரே நிறுவனம் மற்றும் அவர்களது கருவிகள் உறுதுணையாக உள்ளது.மூளைக்கான சி.டி., ஸ்கேன் மற்றும் மார்பு எக்ஸ்ரே ஆகியவற்றில், செயற்கை நுண்ணறிவு திறனை இந்தியாவில் முதல் நிறுவனமாக பயன்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X