சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சியில், சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட தி.நகரில், பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொத்து வரி கட்டாமல் உள்ள கடைகள் குறித்து, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து உள்ளனர்.இதையடுத்து, அக்கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கி வருகின்றனர். இதில், தி.நகர்,

சென்னை : சென்னை மாநகராட்சியில், சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட தி.நகரில், பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொத்து வரி கட்டாமல் உள்ள கடைகள் குறித்து, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து உள்ளனர்.இதையடுத்து, அக்கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கி வருகின்றனர். இதில், தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள 'சண்முகா ஸ்டோர்ஸ்' கடை, 14 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தாமல் இருந்து வந்தது.மேலும், இக்கடை சார்பில் மாநகராட்சிக்கு அளிக்கப்பட்ட காசோலை அனைத்தும், வங்கி கணக்கில் பணமில்லாத காரணத்தால், 'பவுன்ஸ்' ஆகியுள்ளது. இதையடுத்து, சொத்து வரி செலுத்தாத, 'சண்முகா ஸ்டோர்ஸ்' கடைக்கு, கோடம்பாக்கம் மண்டல, உதவி வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.இரும்பு பட்டறைக்கு பூட்டுபழைய வண்ணாரப்பேட்டை பென்சினர் இரண்டாவது குறுக்குத் தெருவில், இரும்பு பட்டறை உள்ளது.

இந்த பட்டறை, 2018 முதல் சொத்து வரி செலுத்தாததால், 85 ஆயிரம் ரூபாய் பாக்கி இருந்தது. இதையடுத்து, ராயபுரம் உதவி வருவாய் அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 'சீல்' வைத்தனர்.அதேபோல், பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா மேஸ்திரி தெருவில் உள்ள தனியார் பள்ளி, 2008 முதல் சொத்து வரி செலுத்தவில்லை. 2.21 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. இதையடுத்து, மாநகராட்சி வருவாய் அலுவலர்கள், நேற்று பள்ளிக்கு 'சீல்' வைக்க சென்றனர்.இதற்கு பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், 30 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தினர்.மீதியை விரைந்து செலுத்துவதாக தெரிவித்தனர். இதையடுத்து, வருவாய் அலுவலர்கள் 'நோட்டீஸ்' ஒட்டிவிட்டு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X