தமிழ்நாடு

முகத்துவாரம் அடைப்பால் பாதிப்பு மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு

Added : செப் 08, 2021
Share
Advertisement
பழவேற்காடு : 'பழவேற்காடில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க வேண்டும்' என, ஆய்விற்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் குழுவினரிடம், மீனவர்கள் முறையிட்டனர்.விளக்கம்பழவேற்காடு, கடலும், ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக, மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.இங்கு, தேசிய கடல்சார் ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணமூர்த்தி தலைமையில், ஐந்து பேர் கொண்ட மத்திய சுற்றுச்சூழல்
 முகத்துவாரம் அடைப்பால் பாதிப்பு மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு

பழவேற்காடு : 'பழவேற்காடில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க வேண்டும்' என, ஆய்விற்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் குழுவினரிடம், மீனவர்கள் முறையிட்டனர்.விளக்கம்பழவேற்காடு, கடலும், ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக, மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

இங்கு, தேசிய கடல்சார் ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணமூர்த்தி தலைமையில், ஐந்து பேர் கொண்ட மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவினர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.திருவள்ளூர் எம்.பி., ஜெயகுமார், பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் மற்றும் மீன் வளம், வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.நிரந்தர முகத்துவாரம் அமைய உள்ள பகுதியை வரைபடங்கள் மூலம், மத்திய குழுவினரிடம், தமிழக அதிகாரிகள் விளக்கினர்.

பின், அங்கு காத்திருந்த மீனவர்கள் ஆய்விற்கு வந்த அதிகாரிகளிடம், 'முகத்துவாரம் அடிக்கடி மண் திட்டுகளால் அடைபட்டு போவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நிரந்தர முகத்துவாரம் அமைக்க, தடையில்லா சான்று வழங்க வேண்டும்' என முறையிட்டனர்.திட்டம்அவர்களிடம், 'முகத்துவாரம் பகுதி முழுதும் ஆய்வு செய்துள்ளோம். மீனவர்கள் பிரச்னைகளை அறிந்துள்ளோம். இது குறித்து விளக்கமான ஆய்வறிக்கையை வழங்குவோம். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என, மத்திய குழுவினர் தெரிவித்து சென்றனர்.பழவேற்காடு முகத்துவாரம், மண் திட்டுகளால் அடிக்கடி அடைபடுவதால், 'நபார்டு' வங்கி நிதியுதவியின் கீழ், 27 கோடி ரூபாயில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X