லாரி -மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி -மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி

Added : செப் 08, 2021
Share
போரூர் : போரூர் அருகே கழிவுநீர் லாரி மோதிய விபத்தில், அ.தி.மு.க., பிரமுகர் உயிரிழந்தார்.போரூர், ஆர்.இ., நகர், எட்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன், 41; அ.தி.மு.க., பிரமுகர். இவர், போரூர் -- குன்றத்துார் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், மின் கட்டணம் செலுத்த இருசக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் தாமோதரன்

போரூர் : போரூர் அருகே கழிவுநீர் லாரி மோதிய விபத்தில், அ.தி.மு.க., பிரமுகர் உயிரிழந்தார்.

போரூர், ஆர்.இ., நகர், எட்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன், 41; அ.தி.மு.க., பிரமுகர். இவர், போரூர் -- குன்றத்துார் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், மின் கட்டணம் செலுத்த இருசக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் தாமோதரன் நிலை தடுமாறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பினார். தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கழிவு நீர் லாரி ஓட்டுனர் கார்த்திக், 26, என, தெரியவந்தது.மேலும், கார்த்திக் அதீத மது போதையில், ஏற்கனவே சாலையோரம் சென்ற மூன்று பேரை இடித்து வந்ததும் தெரியவந்தது. இதில் மூவரும் காயமடைந்தனர். இதையடுத்து, கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X