பொது செய்தி

தமிழ்நாடு

வீடு ஒப்படைப்பு தாமதம் மனுதாரருக்கு இழப்பீடு

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை : ஒப்பந்தபடி குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், மூன்று பேருக்கு தலா, 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே பாண்டூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் அறிவித்தது. அதில் வீடு வாங்க, கிரேஸ் ரஞ்சிதம், 12.30 லட்ச ரூபாய்; ஐரின்

சென்னை : ஒப்பந்தபடி குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், மூன்று பேருக்கு தலா, 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே பாண்டூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் அறிவித்தது. அதில் வீடு வாங்க, கிரேஸ் ரஞ்சிதம், 12.30 லட்ச ரூபாய்; ஐரின் ஜேம்ஸ், 18.87 லட்ச ரூபாய், ஸ்ரீவித்யா அமுதன், 14.76 லட்ச ரூபாய் செலுத்தினார்.இவர்களுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, கட்டுமான பணிகளை முடித்து, வீட்டை அந்நிறுவனம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்டோர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தனர்.இந்த புகார் தொடர்பாக, ஆணைய விசாரணை அதிகாரி சரவணன் பிறப்பித்த உத்தரவு.மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார் உறுதியாகிறது. எனவே, மனுதாரர்கள் செலுத்திய தொகையை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்.மேலும், இவர்களுக்கு தலா, 1 லட்ச ரூபாய் இழப்பீடு, 25 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுக்காக வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X