சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழுத்தில் கத்தியை வைத்து செயின் மொபைல் போன் பறிப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : அரசு கல்லுாரி வாசல் முன் மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து செயின் மற்றும் மொபைல் போன் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் அரசு கொளஞ்சியப்பர் கல்லுாரி உள்ளது. இங்கு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி, நேற்று பகல் 1:00 மணியளவில், கல்லுாரி நுழைவு வாசல் முன் தோழிகளுக்காக காத்திருந்தார்.அப்போது, அங்கு

விருத்தாசலம் : அரசு கல்லுாரி வாசல் முன் மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து செயின் மற்றும் மொபைல் போன் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் அரசு கொளஞ்சியப்பர் கல்லுாரி உள்ளது. இங்கு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி, நேற்று பகல் 1:00 மணியளவில், கல்லுாரி நுழைவு வாசல் முன் தோழிகளுக்காக காத்திருந்தார்.அப்போது, அங்கு நடந்து வந்த மர்ம நபர், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். அவரது கழுத்தில் இருந்த 4 கிராம் செயின் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றார். கல்லுாரி வளாகம் முன் நின்ற மாணவியிடம் மர்ம நபர் கத்தியை காட்டி செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், 'மாணவியிடம் விசாரணை மேற்கொண்டோம். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டோம். அவர் கல்லுாரி அருகே தனது நண்பருடன் பேசியதும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவரை விசாரித்தால் முழு உண்மை தெரியவரும். கல்லுாரி நுழைவு வாயில் என்று மாணவி சொன்னது போல் சம்பவம் நடக்கவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X