தமிழ்நாடு

கலாசார மாறுதல் இல்லாமல் வாழ பழக வேண்டும்: பம்மல் ராமகிருஷ்ணன்

Added : செப் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நெய்வேலி : 'கலை, கலாசார மாறுதல் இல்லாமல் இளைய சமுதாயத்தினர் வாழ பழகிக் கொள்ள வேண்டும்' என தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசினார்.கடலுார் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள மல்லிகா திருமண மண்டபத்தில் பதிவு பெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா நடந்தது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியரை கவுரவித்தல், 10
  கலாசார மாறுதல் இல்லாமல் வாழ பழக வேண்டும்: பம்மல் ராமகிருஷ்ணன்

நெய்வேலி : 'கலை, கலாசார மாறுதல் இல்லாமல் இளைய சமுதாயத்தினர் வாழ பழகிக் கொள்ள வேண்டும்' என தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசினார்.

கடலுார் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள மல்லிகா திருமண மண்டபத்தில் பதிவு பெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா நடந்தது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியரை கவுரவித்தல், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை கவுரவித்தல், ஏழை பிராமண குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது ஆகிய முப்பெரும் விழா நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் நெய்வேலி ராஜேஷ் தலைமை தாங்கினார். கோபால், பார்த்தசாரதி, ராஜகோபால நாராயணன், மாநில ஆலோசகர் சுப்பிரமணியம், மாநில செயலாளர் நாராயண சாஸ்திரி, அந்தணர் குரல் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் நெய்வேலி கிளை தலைவர் ராமு வரவேற்றார். சங்க செயல்பாடுகளை பொது செயலாளர் சந்துரு விளக்கினார்.மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசுகையில், 'இன்றைய காலகட்டத்தில் நமது சமுதாயத்திற்கு எந்த இடங்களில் இழப்பு ஏற்படுகிறது என்பதை கவனித்து சமாளித்து வாழ கற்றுக் கொள்வதுடன் அதற்கேற்ப செயல்பட வேண்டும். சங்கத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு குடும்பத்தினரின் உதவியுடன் நாம் பாடுபட வேண்டும். கலை, கலாசார மாறுதல் இல்லாமல் இளைய சமுதாயம் வாழ பழகிக் கொள்ள வேண்டும்' என்றார்.விழாவில் நெய்வேலியை சேர்ந்த ஆசிரியை மீனாட்சி ஹரிஹர குமார் மற்றும் தமிழக அரசின் சிறந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஷோபனா ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. .

10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 23 மாணவர்களுக்கு ஊக்க பரிசு மற்றும் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை படிக்கும் ஏழை பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த 35 மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 70 ஆயிரம் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க பொருளாளர் நடராஜன், நெய்வேலி இளைஞரணி தலைவர் சுரேஷ், வெங்கட்ரமணி, காமாட்சி, சங்கரன், சந்திரசேகரன், சுவாமிநாதன், கிருஷ்ண சர்மா, ரமணி, மகேஷ் மற்றும் மகளிரணியைச் சார்ந்த சாருமதி, காயத்ரி, மகிமா, ரமணி, பிரியா, கீதா செய்திருந்தனர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-செப்-202109:25:57 IST Report Abuse
அப்புசாமி பம்மலார் முதலில் தன் கையில் செல்பேசி, வீட்டில் கணினி, டி.வி எல்லாத்தையும் மூட்டை கட்டணும். இவரும் குடுமி வெச்சு, இவிங்க குடும்பத்தினரையும் செய்த வைக்கணும். வைதீகாளே இப்போ புல்லட்டில், செல்போனில் பேசிண்டே , மந்திரத்துக்கு நடுவில் போனில் பேசி மனசுக்கு கஷ்டமா இருக்கு. இவா மாறிண்டே இருப்பா...
Rate this:
Cancel
08-செப்-202109:25:58 IST Report Abuse
அப்புசாமி பம்மலார் முதலில் தன் கையில் செல்பேசி, வீட்டில் கணினி, டி.வி எல்லாத்தையும் மூட்டை கட்டணும். இவரும் குடுமி வெச்சு, இவிங்க குடும்பத்தினரையும் செய்த வைக்கணும். வைதீகாளே இப்போ புல்லட்டில், செல்போனில் பேசிண்டே , மந்திரத்துக்கு நடுவில் போனில் பேசி மனசுக்கு கஷ்டமா இருக்கு. இவா மாறிண்டே இருப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X