சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் அருகே சுவாமி சிலை வஸ்திரங்களுக்கு தீ வைத்தவர் கைது

Added : செப் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோவிலில் சுவாமி சிலைகள் மீது இருந்த வஸ்திரங்களுக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தில் பழமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரகாரத்தில் நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், தட்சணாமூர்த்தி, லிங்கேஸ்வரர் உட்பட பல சுவாமிகளின் சிலைகள் உள்ளன. இக்கோவிலில் கருவறையில் மட்டுமே கதவு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோவிலில் சுவாமி சிலைகள் மீது இருந்த வஸ்திரங்களுக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தில் பழமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரகாரத்தில் நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், தட்சணாமூர்த்தி, லிங்கேஸ்வரர் உட்பட பல சுவாமிகளின் சிலைகள் உள்ளன. இக்கோவிலில் கருவறையில் மட்டுமே கதவு உள்ளது.கடந்த மாதம் 29ம் தேதி இரவு மர்ம நபர், கோவிலுக்குள் சென்று அங்குள்ள பிரகாரத்தில் இருக்கும் சுவாமி சிலைகள் மீது அணிவிக்கப்பட்டிருந்த வஸ்திரங்களுக்கு தீ வைத்துள்ளார்.

அப்போது, மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.இதையறிந்த விழுப்புரம் பா.ஜ., அமைப்பு சாரா கட்டுமானப்பிரிவு மாநில அமைப்பாளர் கோபி, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் நேற்று, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.அதன் பேரில், டி.எஸ்.பி., பழனிசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.மேலும், வீடியோவில் பதிவான நபர் குறித்து விசாரித்ததில், விழுப்புரம், கந்தசாமி லேஅவுட்டைச் சேர்ந்த பாவா பக்ருதீன் மகன் அசலன்அமீன், 26; என தெரியவந்தது. உடன் அவரை நேற்று இரவு பிடித்து விசாரித்தனர்.அதில், அசலன்அமீனுக்கு திருமணமாகவில்லை. ஆட்டோ மொபைல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக, தன் குறைகள் நீங்க வேண்டும் என வைத்தீஸ்வரன் கோவிலில் வேண்டியுள்ளார்.வேண்டுதல் நிறைவேறாததால் விரக்தியடைந்து, குடிபோதையில் கோவிலில் இருந்த அகல் விளக்கு தீபத்தை எடுத்து தீ வைத்தது தெரியவந்தது.அசலன்அமீன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X