சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலுவை பணப்பலன்  வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்ககோரி அரசு போக்குவரத்து கழக பென்சனர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார்.பொருளாளர் மாரிமுத்து, மண்டல தலைவர் ஆரோக்கியம் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் ஜீவன் மூர்த்தி, கவுரவ தலைவர் சுப்பிரமணியன்

மதுரை : மதுரையில் பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்ககோரி அரசு போக்குவரத்து கழக பென்சனர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார்.பொருளாளர் மாரிமுத்து, மண்டல தலைவர் ஆரோக்கியம் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் ஜீவன் மூர்த்தி, கவுரவ தலைவர் சுப்பிரமணியன் பேசினர். மண்டல செயலாளர் பாண்டி, பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2015 - 21 வரையிலான அகவிலைப்படி மற்றும் நிலுவைத் தொகை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.ஓய்வூதியர்களுக்கும் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X