பொது செய்தி

தமிழ்நாடு

விபத்து நஷ்டஈடு வழங்காததால் திண்டிவனத்தில் அரசு பஸ் ஜப்தி

Added : செப் 08, 2021
Share
Advertisement
திண்டிவனம் : விபத்து நஷ்டஈடு வழங்காததால், திண்டிவனத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், வானுார், மயிலம் சாலையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 42; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் 2016 செப்., 5ம் தேதி அதிகாலை 5:30 மணியளவில், தோகைப்பாடி சாலையில் நடந்து சென்றார். அவ்வழியே வந்த அரசு பஸ், மோதி, ஏழுமலை இறந்தார்.இவரது மனைவி சிவரமணி, 35; விபத்து இழப்பீடு கோரி, திண்டிவனம் விரைவு

திண்டிவனம் : விபத்து நஷ்டஈடு வழங்காததால், திண்டிவனத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானுார், மயிலம் சாலையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 42; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் 2016 செப்., 5ம் தேதி அதிகாலை 5:30 மணியளவில், தோகைப்பாடி சாலையில் நடந்து சென்றார். அவ்வழியே வந்த அரசு பஸ், மோதி, ஏழுமலை இறந்தார்.இவரது மனைவி சிவரமணி, 35; விபத்து இழப்பீடு கோரி, திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு 5 லட்சம் மற்றும் செலவு தொகை நஷ்டஈடாக அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு பிப்., 20ம் தேதி உத்தரவிட்டார்.நஷ்டஈடு வழங்காததால் சிவரமணி தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், வட்டித் தொகை சேர்த்து, 12 லட்சத்து 65 ஆயிரத்து 358 ரூபாய் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. நஷ்டஈடு தராமல் காலம் தாழ்த்தியதால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி நீதிபதி சுதா உத்தரவிட்டார்.நேற்று காலை 8:15 மணியளவில், சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை, திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் சீனியர் கட்டளை நிறைவேற்றுனர் லட்சுமி முன்னிலையில் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X