மாஜி டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு| Dinamalar

'மாஜி' டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Added : செப் 08, 2021
Share
விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி., திரிபாதியிடம் புகார் அளித்தார். இதையடுத்து சிறப்பு டி.ஜி.பி.,

விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி., திரிபாதியிடம் புகார் அளித்தார். இதையடுத்து சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இது தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., மீதும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆகியோர் ஆஜராகினர்.அப்போது, இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது. இதனால், இவ்வழக்கை இங்கு விசாரிக்க கூடாது என்ற சிறப்பு டி.ஜி.பி., தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் நடந்தது.அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், அம்மனு மீதான பதில் மனு தாக்கலில் இவ்வழக்கை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்திலேயே விசாரிக்கலாம். அதற்கு முழு அதிகாரம் உண்டு என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.அதற்கு, சிறப்பு டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர், ஐகோர்ட் உத்தரவு நகலை சமர்ப்பித்தால் தான் நாங்கள் வாதாட வசதியாக இருக்கும் என கூறினார்.இதையடுத்து, அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின் போது, ஐகோர்ட் உத்தரவு நகலை சமர்ப்பிப்பதாக கூறினார்.பின், நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X