பல்கலைக்கு சேவை வரி ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலைக்கு சேவை வரி ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 08, 2021
Share
மதுரை : மதுரை காமராஜ் பல்கலைக்கு சேவை வரி விதிக்க முடியாது. வரி விதித்த ஜி.எஸ்.டி.,இணைக் கமிஷனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலைக்கு தனி சட்டம் உள்ளது. பல்கலை அதிகார வரம்பிற்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இணைவிப்பு வழங்குதல், மாணவர் சேர்க்கை, தேர்வு நடத்துதல்,

மதுரை : மதுரை காமராஜ் பல்கலைக்கு சேவை வரி விதிக்க முடியாது. வரி விதித்த ஜி.எஸ்.டி.,இணைக் கமிஷனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலைக்கு தனி சட்டம் உள்ளது. பல்கலை அதிகார வரம்பிற்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இணைவிப்பு வழங்குதல், மாணவர் சேர்க்கை, தேர்வு நடத்துதல், பட்டங்கள் வழங்குதலை முதன்மை பணியாக மேற்கொள்கிறது. பல்கலைக்கு சேவை வரி விதித்து மதுரை ஜி.எஸ்.டி.,மற்றும் மத்திய கலால்வரித்துறை இணைக் கமிஷனர் 2019 ல் உத்தரவிட்டார். சேவை என்பது ஒருவரின் நடவடிக்கை மூலம் மற்றொருவருக்கு வழங்குவது.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி, உணவு வழங்குதல், கல்வி நிறுவன பாதுகாப்பு அல்லது பராமரிப்புப் பணி, மாணவர் சேர்க்கை, தேர்வு நடத்துதல் சேவையின் கீழ் வராது. கல்வி நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது. இணைக் கமிஷனரின் உத்தரவு சட்டவிரோதம். ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு பதிவாளர் குறிப்பிட்டார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு: கல்வி நிறுவனமான பல்கலை செய்யும் சேவைக்கு சேவைவரி கோர முடியாது. இணைவிப்பு அல்லது இதர வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பல்கலை வழங்கும் சேவைக்கு சேவை வரி விதிக்க முடியாது. இணைக் கமிஷனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X