போலீஸ் செய்திகள்

Added : செப் 08, 2021
Share
Advertisement
வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைதுமதுரை: மேற்குவங்காளத்தைச் சேர்ந்தவர் சித்தன்சிங் 32. இரணியம் கிராமத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து நண்பருடன் சென்றபோது ஆட்டோவில் வந்த செம்பியனேந்தல் அஜித் 24, சம்பக்குளம் மணிகண்டன் 24, உட்பட மூவர் தாக்கி அலைபேசியை பறித்ததாக கைது செய்யப்பட்டனர். பாரதிநகர் கார்த்திக்கை

வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: மேற்குவங்காளத்தைச் சேர்ந்தவர் சித்தன்சிங் 32. இரணியம் கிராமத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து நண்பருடன் சென்றபோது ஆட்டோவில் வந்த செம்பியனேந்தல் அஜித் 24, சம்பக்குளம் மணிகண்டன் 24, உட்பட மூவர் தாக்கி அலைபேசியை பறித்ததாக கைது செய்யப்பட்டனர். பாரதிநகர் கார்த்திக்கை அப்பன்திருப்பதி போலீசார் தேடி வருகின்றனர்.

ஏட்டுக்கு மிரட்டல்: ரவுடி மீது வழக்கு

மதுரை: கமிஷனரின் தனிப்படை ஏட்டு செந்தில். இவருக்கு பந்தல்குடி ரவுடி ராஜேஷ், அலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த ஆடியோ வைரலானது. தலைமறைவாக உள்ள ராஜேஷ் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மணல் திருடியவர் கைது

சிந்துபட்டி: போலீசார் மூன்றுமலை அடிவாரத்தில் ரோந்து சென்ற போது அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிய அயோத்திபட்டி நேருவை 58, கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

விபத்தை விசாரிக்க சென்ற போலீஸ்காரர் பலி

அவனியாபுரம்: திருமங்கலம் கிழக்குத் தெரு ராஜசேகரன் 42. மதுரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு 1ன் ஏட்டு. நேற்றுமுன்தினம் மதியம் சின்ன உடைப்பில் நடந்த விபத்து குறித்து விசாரிக்க டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணிந்திருந்தார். அவனியாபுரம் மண்டேலா நகர் போலீஸ் செக்போஸ்ட் அருகே இரும்பு தடுப்பில் டூவீலர் மோதி காயமுற்றார். அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

பர்சை போலீசிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

உசிலம்பட்டி: மலைப்பட்டி ஜெயசீலா.தனது பர்ஸில் ரூ. 6 ஆயிரமும், 4 வெள்ளி மிஞ்சிகளும் இருந்ததை ஊருக்குச் செல்லும் வழியில் தவறவிட்டார். கவணம்பட்டி ரோட்டில் கீழே கிடந்த அதை உசிலம்பட்டி நயினார் 42, அடைக்கலம் 36, ஆகியோர் கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ஜெயசீலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இளைஞர்களை போலீசார் பாராட்டினர்.

விவசாயி பலி

உசிலம்பட்டி: செட்டியபட்டி விவசாயி வைரபாண்டி 60. நேற்று அதிகாலை வாடி கருப்பு கோயில் அருகே உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றபோது மதுரை -- தேனி ரோட்டில் வாகனம் ஒன்று மோதி இறந்தார்.பெண் தற்கொலைஉத்தப்பநாயக்கனுார்: லிங்கப்பநாயக்கனுார் பார்த்திபன் மனைவி ராஜேஸ்வரி 27. மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தகராறில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X