தமிழ்நாடு

போலீஸ் துணை கமிஷனர் பணியிடங்கள் மாற்றி அமைப்பு; உதவிகமிஷனர் 'ரேஞ்ச்' பணியிட பெயர்களும் மாற்றம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை நகரில் போலீஸ் துணைகமிஷனர் பணியிடங்கள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. தினமலர் செய்தி எதிரொலியாக இனி சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவை ஒரே துணைகமிஷனர் கவனிப்பார். உதவிகமிஷனர் 'ரேஞ்ச்' பணியிட பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.நகரில் சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, ஆயுதப்படை, தலைமையிடத்து துணைகமிஷனர் பணியிடங்கள் உள்ளன. சென்னையை போன்று மதுரையிலும்
போலீஸ் துணை கமிஷனர் பணியிடங்கள் மாற்றி அமைப்பு; உதவிகமிஷனர் 'ரேஞ்ச்' பணியிட பெயர்களும் மாற்றம்

மதுரை : மதுரை நகரில் போலீஸ் துணைகமிஷனர் பணியிடங்கள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. தினமலர் செய்தி எதிரொலியாக இனி சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவை ஒரே துணைகமிஷனர் கவனிப்பார். உதவிகமிஷனர் 'ரேஞ்ச்' பணியிட பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

நகரில் சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, ஆயுதப்படை, தலைமையிடத்து துணைகமிஷனர் பணியிடங்கள் உள்ளன. சென்னையை போன்று மதுரையிலும் வடக்கு, தெற்கு துணைகமிஷனர் பணியிடம் உருவாக்கப்பட்டு, அதில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவை சேர்த்து பார்க்க வேண்டும் என தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. இதன்எதிரொலியாக தற்போது வைகையாற்றை மையமாக வைத்து வடக்கு, தெற்கு துணைகமிஷனர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உதவிகமிஷனர் 'ரேஞ்ச்' பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. மதுரை நகர் ச.ஒ., உதவிகமிஷனர் பணியிடம் இனி 'டெம்பிள் ரேஞ்ச்' என்றும், நகர் குற்றப்பிரிவு உதவிகமிஷனர் பணியிடம் தெற்குவாசல் ரேஞ்ச் என்றும் அழைக்கப்படும். திலகர்திடல் உதவிகமிஷனர் பணியிடம்(குற்றம்) திடீர்நகர் ரேஞ்ச் என்றும், தல்லாகுளம் குற்றம் செல்லுார் ரேஞ்ச், அண்ணாநகர் குற்றம் அவனியாபுரம் ரேஞ்ச் என்றும் அழைக்கப்படும். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவை இனி அந்தந்த ரேஞ்ச் உதவிகமிஷனர்கள் சேர்த்தே கவனிப்பார்கள். கூடுதலாக பழங்காநத்தம், கரிமேடு உதவிகமிஷனர்கள் பணியிடம் உருவாக்கப்பட உள்ளது.

சட்டம் ஒழுங்கு துணைகமிஷனர் பணியிடம் இனி மதுரை தெற்கு துணைகமிஷனர் என்றழைக்கப்படும். இவருக்குகீழ் டெம்பிள், தெற்குவாசல், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ரேஞ்ச் வருகின்றன. மதுரை வடக்கு துணைகமிஷனரின்கீழ் தல்லாகுளம், செல்லுார், அண்ணாநகர் ரேஞ்ச், உயர்நீதிமன்றம் கிளை வருகின்றன. நிர்வாகத்தை மட்டும் கவனித்து வந்த தலைமையிடத்து துணைகமிஷனருக்குகீழ் சில போலீஸ் பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அனுப்பானடி ஸ்டேஷன் மற்றும் திருநகர், மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கூடல்புதுார் போக்குவரத்து ஸ்டேஷன்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X