தமிழ்நாடு

நகர்களில் நெரிசலை குறைக்க இணைப்பு சாலை அமைக்கப்படுமா

Added : செப் 08, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய இணைப்பு சாலைகள் அமைப்பதோடு, கிடப்பில் உள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.மாவட்டத்தில் முக்கிய நகர்களில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளன. இதனால் முக்கியமான ரோடுகள் அனைத்திலும் போக்குவரத்து அதிகமாக

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய இணைப்பு சாலைகள் அமைப்பதோடு, கிடப்பில் உள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மாவட்டத்தில் முக்கிய நகர்களில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளன. இதனால் முக்கியமான ரோடுகள் அனைத்திலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. காலை ,மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி பலமணி நேரம் டிராபிக் ஜாம் ஆகிறது.

சிறிய நகரங்களில் கூட போக்குவரத்து நெரிசலால் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கனரக வாகன எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளதால் , இவற்றை கருத்தில் கொண்டு அந்தந்த ஊர்களில் இணைப்பு சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பல ஊர்களில் சாலைகளுக்கான இடங்கள் கையகப்படுத்தப்பட்டும் இதன் பணிகள் ஆமை வேகத்தில் நகருகிறது.

இன்னும் சில ஊர்களில் இணைப்பு சாலைகளுக்கான இடத்தை தேடி கொண்டிருக்கின்றனர். புறநகர் பகுதிகள் ,அணுகுசாலைகளை முன் கூடியே திட்டமிட்டு தயாராக வைத்திருந்தால், இணைப்பு சாலைகள் அமைக்க ஏதுவாக இருந்திருக்கும். தற்போது சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை பிளாட்களாக மாறி விடுகின்றன.

அதிகாரிகளும் இதை கண்டு கொள்வது இல்லை. அருப்புக்கோட்டை இணைப்பு சாலையான இ.3. ரோடு , புறநகர் ரோடு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோன்று மாவட்டதில் பல ஊர்கள் உள்ளன. இதை விரைவுப்படுத்துவது அவசியமாகிறது........

இணைப்பு சாலைகள் அவசியம்

ஒவ்வொரு ஊருக்கும் இணைப்பு சாலைகள் அவசியம். ஏதாவது முக்கிய பிரச்னை , ரோடு பணிகள் நடைபெறும் போது இணைப்பு சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். இணைப்பு சாலைகள் இருந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். அரசு தான் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.சண்முகராஜ், சமூக ஆர்வலர், அருப்புக்கோட்டை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X