பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலை பணிகள் விறு விறு; நீதிமன்ற ஆணையை எதிர்பார்த்து பக்தர்கள்

Added : செப் 08, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான சிலை அலங்கார பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கம் போல் திருவிழா நடைபெற நீதிமன்றம் ஆணை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே அதிகரித்துள்ளது.ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 33 ஆண்டுகளாக

ராஜபாளையம் : ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான சிலை அலங்கார பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கம் போல் திருவிழா நடைபெற நீதிமன்றம் ஆணை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே அதிகரித்துள்ளது.

ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.ஹிந்து பண்டிகையாக இருப்பினும் மற்ற மதத்தினரும் பங்கேற்கும் வகையில் நல திட்ட உதவிகள் வழங்கி அனைத்து சமுதாய திரு விழாவாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றை காரணம் காட்டி ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் ஆகஸ்ட் 1 ம் தேதி சிலை பணிகளை நிறுத்த போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் பணிகளை தொடர சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பெற்றார்.அதன்படி சிலை அமைப்பு பணி நடந்து வருகிறது.

செப். 10ம் தேதி விழா நடைபெற உள்ள நிலையில் ஊர்வலத்திற்கும், திருவிழாவிற்கும் அனுமதி பெற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மூலம் சட்டப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார். தற்போது கோயில் வளாகத்தில் தயாராகிவரும் ஆக்ரோஷ கணபதி, நாக ராஜ கணபதி, ஒட்டகம், காண்டாமிருகம், யானை, ஒட்டகச்சிவிங்கி மேல் அமர்ந்தஇருக்கும் படியான விநாயகர் சிலைகள் அமைப்பு பணிகளும் கடைசி கட்டத்தை எட்டி உள்ளன.கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஊர்வலம் நடைபெற அனுமதி கிடைக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X