பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் வருவதில்லை.. ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் புகார்

Added : செப் 08, 2021
Share
Advertisement
நரிக்குடி : ஒன்றிய கூட்டத்திற்கு துறை அதிகாரிகள் இருப்பதில்லை, என ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் போஸ் புகார் கூறினர்.நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில், பி.டி.ஓ.,க்கள் சத்தியவதி, திருநாவுக்கரசி முன்னிலையில் நடந்தது.கவுன்சிலர்கள் விவாதம்:கவிதா(அ.தி.மு.க.,): கிருதுமால் நதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

நரிக்குடி : ஒன்றிய கூட்டத்திற்கு துறை அதிகாரிகள் இருப்பதில்லை, என ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் போஸ் புகார் கூறினர்.

நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில், பி.டி.ஓ.,க்கள் சத்தியவதி, திருநாவுக்கரசி முன்னிலையில் நடந்தது.கவுன்சிலர்கள் விவாதம்:

கவிதா(அ.தி.மு.க.,): கிருதுமால் நதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். இருஞ்சிறை காலனி வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் மராமத்து பணிகளை செய்ய வேண்டும்.

பி.டி.ஓ.,: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

போஸ் (அ.தி.மு.க.,): நாலுாரில் மயானத்திற்கு செல்ல ரோடு வேண்டும்.பி.டி.ஓ.,: இடம் கொடுத்தால் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும்.

காளீஸ்வரி(தி.மு.க.,): அ.முக்குளத்தில் ஊரணிக்கு தடுப்புச்சுவர்,அழகாபுரி நுாலகத்தில் தரைதள தொட்டி , குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

பி.டி.ஓ.,: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

போஸ் (அ.தி.மு.க.,): விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகளை தோட்டக்கலைத்துறையினர் முறையாக வழங்குவது கிடையாது.

பி.டி.ஓ.,: சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.

போஸ் (அ.தி.மு.க.,): குறைகளை தெரிவிக்க நினைத்தால் கூட்டத்திற்கு துறை அதிகாரிகள் வருதில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

சரளாதேவி (அ.தி.மு.க.,): மின்வாரிய அலுவலகம், வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் கேட்டு அலுத்துப் போச்சு. எந்த நடவடிக்கையும் இல்லை.

ஜெயலட்சுமி(அ.தி.மு.க.,): நரிக்குடி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

கவிதா (அ.தி.மு.க.,): காட்டுப் பன்றிகளால் விவசாயம் பாதிக்கிறது. தடுக்க வேண்டும்.

கலாவதி சந்திரன் (அ.தி.மு.க.,): கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெ., படம் வைக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X