பொது செய்தி

தமிழ்நாடு

பறிபோகுது உரிமை; ஊராட்சி தலைவர்கள் முறையீடு

Added : செப் 08, 2021
Share
Advertisement
விருதுநகர் : உரிமைகள் அனைத்தும் பறிபோவதாக விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் ஊராட்சி தலைவர்கள் முறையிட்டனர்.மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது : மாநில குழு மானியம் முறையாக வழங்கப்படவில்லை. நிதி வழங்கப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி முறையாக வழங்கப்படவில்லை. ஊராட்சி செயலாளர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக

விருதுநகர் : உரிமைகள் அனைத்தும் பறிபோவதாக விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் ஊராட்சி தலைவர்கள் முறையிட்டனர்.

மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது : மாநில குழு மானியம் முறையாக வழங்கப்படவில்லை. நிதி வழங்கப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி முறையாக வழங்கப்படவில்லை. ஊராட்சி செயலாளர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுகிறார்கள்.

அவர்களுக்கு பணி இடமாற்றம் செய்ய வேண்டும். ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் அடையாள அட்டையை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களை நியமிக்கும் உரிமை ஒன்றிய கவுன்சிலரிடம் உள்ளது.

ஆனால் அத்திட்டத்தில் பணிகள் முறையாக முடிக்கப்படாமல் இருந்தால், ஊராட்சி தலைவர்கள் தான் பொறுப்பு என்கிறார்கள். ஊராட்சி தலைவருக்கான உரிமையை ஊராட்சி தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என , குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X