பொது செய்தி

தமிழ்நாடு

ஆதாரில் அலைபேசி எண் மாற்றணுமா; இருக்கவே இருக்கிறார் போஸ்ட்மேன்

Added : செப் 08, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் : தபால் பட்டுவாடா செய்யவரும் போஸ்ட்மேன் மூலமே பொதுமக்கள் தங்களின் ஆதார் கார்டில் அலைபேசி எண்களை இணைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்திய அஞ்சல் துறையின் மூலம் ஆதார் கார்டில் அலைபேசி எண் சேர்த்தல் மாற்றுதல், பெயர் சேர்த்தல், அட்ரஸ் மாறுதல் செய்தல், போட்டோ , கைரேகை

ஸ்ரீவில்லிபுத்தூர் : தபால் பட்டுவாடா செய்யவரும் போஸ்ட்மேன் மூலமே பொதுமக்கள் தங்களின் ஆதார் கார்டில் அலைபேசி எண்களை இணைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் மூலம் ஆதார் கார்டில் அலைபேசி எண் சேர்த்தல் மாற்றுதல், பெயர் சேர்த்தல், அட்ரஸ் மாறுதல் செய்தல், போட்டோ , கைரேகை மாற்றும் வசதி தாலுகா அளவிலான போஸ்ட் ஆபீஸ்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படுகிறது.

தற்போது தபால் பட்டுவாடா செய்ய வரும் போஸ்ட் மேன்கள் வைத்துள்ள அலைபேசிகள் மூலம், பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டில் அலைபேசி எண்களை இணைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ்வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு அஞ்சல் துறை விருதுநகர் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் கேட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X