பொது செய்தி

தமிழ்நாடு

சிலம்பத்தில் தங்கம்: சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சிவகாசி : ஆன்லைனில் நடந்த சிலம்பம் உலக கோப்பை போட்டியில் மீனம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அஜய், ராஜலட்சுமி தங்கம் வென்று சாதித்தனர்.இந்தியா, இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்கேற்ற ஆன்லைன் சிலம்ப உலக கோப்பை போட்டியில், சிவகாசி டி.கே.எஸ்., சிலம்பம் அகாடமி சார்பாக பங்கேற்ற மீனம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 7 ம் வகுப்பு மாணவர் அஜய் வாள் வீச்சு பிரிவில் முதல்
 சிலம்பத்தில் தங்கம்: சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்

சிவகாசி : ஆன்லைனில் நடந்த சிலம்பம் உலக கோப்பை போட்டியில் மீனம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அஜய், ராஜலட்சுமி தங்கம் வென்று சாதித்தனர்.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்கேற்ற ஆன்லைன் சிலம்ப உலக கோப்பை போட்டியில், சிவகாசி டி.கே.எஸ்., சிலம்பம் அகாடமி சார்பாக பங்கேற்ற மீனம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 7 ம் வகுப்பு மாணவர் அஜய் வாள் வீச்சு பிரிவில் முதல் இடம், மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5 ம் வகுப்பு மாணவி ராஜலட்சுமி ஒற்றைக்கம்பு வீச்சில் முதல் இடத்தையும் பிடித்து தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற இருவரும் அடுத்ததாக இலங்கையில் நடக்க உள்ள சர்வதேச போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X