நடுரோட்டில் திருஷ்டி பூசணி உடைப்பு; தேவையாகுது போலீஸ் நடவடிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடுரோட்டில் திருஷ்டி பூசணி உடைப்பு; தேவையாகுது போலீஸ் நடவடிக்கை

Added : செப் 08, 2021
Share
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி ரோடுகளில் திருஷ்டி பூசணி உடைப்பது வாடிக்கையாக உள்ளது.இதன் மூலம் ஏற்படும் விபத்துக்களால் பலர் பாதிக்கும் நிலையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் செவ்வாய், வெள்ளி, அமாவாசை,பவுர்ணமி உட்பட பல முக்கிய விசேஷ நாட்களில் ரோடுகளில் திருஷ்டி பூசணி உடைப்பது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி ரோடுகளில் திருஷ்டி பூசணி உடைப்பது வாடிக்கையாக உள்ளது.இதன் மூலம் ஏற்படும் விபத்துக்களால் பலர் பாதிக்கும் நிலையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் செவ்வாய், வெள்ளி, அமாவாசை,பவுர்ணமி உட்பட பல முக்கிய விசேஷ நாட்களில் ரோடுகளில் திருஷ்டி பூசணி உடைப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தை சந்திக்கும் அபாயம் அதிகம் உள்ளது. போதுமான அளவில் துாய்மை பணியாளர்கள் இல்லாத காரணத்தால் விதிகளைமீறி ரோட்டில் உடைக்கப்படும் திருஷ்டி பூசணிக்காய்களை உடனடியாக அகற்றுவதும் முடியாது உள்ளது.

ரோடு, தெருக்களில் பூசணிக்காய் உடைப்பது குற்றம் என்று தெரிந்தும் இது போன்ற விதிமீறல்கள் தொடர்கிறது.நடவடிக்கை எடுக்கப்படும்எஸ்.பி.,மனோகர்: ரோடுகளில் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X