பொது செய்தி

இந்தியா

1,349 நிறுவன சொத்து விற்பனை; திவால் சட்டத்தில் நடவடிக்கை

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : கடந்த, ஜூன் நிலவரப்படி, திவால் சட்டத்தின் கீழ், 1,349 நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய திவால் வாரியம் தெரிவித்துள்ளது. திவால் சட்டத்தின் கீழ், வங்கிக் கடனை திரும்பத் தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதன்படி, நலிவில் இருந்து மீளும் வாய்ப்புள்ள நிறுவனங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின்

புதுடில்லி : கடந்த, ஜூன் நிலவரப்படி, திவால் சட்டத்தின் கீழ், 1,349 நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய திவால் வாரியம் தெரிவித்துள்ளது. திவால் சட்டத்தின் கீழ், வங்கிக் கடனை திரும்பத் தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



latest tamil news


இதன்படி, நலிவில் இருந்து மீளும் வாய்ப்புள்ள நிறுவனங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டு, நிர்வாக உரிமம் கைமாற்றப்படுகிறது. அவ்வாறின்றி, மீட்சி காண வாய்ப்பற்ற நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்து கடன் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில், புதிய திவால் சட்டம் அறிமுகமான ஐந்து ஆண்டுகளில் 4,541 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், கடந்த ஜூன் நிலவரப்படி 2,859 நிறுவனங்கள் மீதான நடவடிக்கை முடிவடைந்துள்ளது.1,349 நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்து, கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


396 நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திவால் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, பெரும்பாலான நிறுவனங்களின் சொத்து மதிப்பு அடியோடு குறைந்துள்ளது. நிலுவையில் உள்ள கடனில், சராசரியாக 7 சதவீத அளவிற்கே, திவால் நிறுவனங்களின் சொத்துக்கள் உள்ளதாக, இந்திய திவால் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் நிலவரப்படி, திவால் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட கடன் நிலுவையில், 36 சதவீத அளவிற்கே, நிதி நிறுவனங்களுக்கு திரும்பக் கிடைத்துள்ளது. அதில், 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வாராக் கடன் 80 சதவீதமாக உள்ளது. இதுபோல, குறைந்த கடனுக்காக திவால் நடவடிக்கை எடுப்பதில் நிதி நிறுவனங்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது.

அதிக வாராக் கடன் உள்ள நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவே, நிதி நிறுவனங்கள் விரும்புவதாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-செப்-202116:35:48 IST Report Abuse
அப்புசாமி இந்திய திவால் வாரியம்... பேஷ் பேஷ் பேர் ரொம்ப நன்னாருக்கு. சீக்கிரமே இந்தியாவே திவால் ஆயிரும் போலிருக்கு. உள்ளூர் தொழில் முனைவோரை திவாலாக்கி ஃப்ளிப்கார்ட், அமேசான் முன்னேறுது. ஆத்மநிர்பரா கொடிகட்டி பறக்குது.
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
09-செப்-202115:27:58 IST Report Abuse
mathimandhiriaamaam...
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
08-செப்-202115:01:33 IST Report Abuse
canchi ravi மோசடிக் காலையில் வல்லவர்கள் நிரம்பியுள்ளார்கள். இந்த அரசாங்கம் ஆணித்தரமான நடவடிக்கை எடுத்து மக்கள் பணத்தை மீட்க வேண்டும்.
Rate this:
Cancel
Malarvizhi - Hyderabad,இந்தியா
08-செப்-202111:23:52 IST Report Abuse
Malarvizhi வாராக்கடன் சுமை பெரும் சுமையாக உள்ளது நாட்டிற்கு. வங்கிக்கடன் வழங்குவதில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் முழு கடன் தொகையும் கடன் வாங்குபவருக்கு கிடைப்பதில்லை பல சமயங்களில். அரசாங்கம் உள்ளூர் அரசியல்வாதிகள் தலையீட்டினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X