பொது செய்தி

இந்தியா

இரவு நேர ஊரடங்கால் மாணவர்கள், தொழிலாளர்கள் அவதி

Added : செப் 08, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், மெட்ரோ ரயில் போக்குவரத்து நேர விஸ்தரிப்புக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ளது.பெங்களூரில் கொரொனா தொற்று, இன்னும் முடிவுக்கு வராததாலும், மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும், மாநில அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியது. இது, இன்னும் நீக்கப்படவில்லை.

பெங்களூரு : பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், மெட்ரோ ரயில் போக்குவரத்து நேர விஸ்தரிப்புக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ளது.பெங்களூரில் கொரொனா தொற்று, இன்னும் முடிவுக்கு வராததாலும், மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும், மாநில அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியது. இது, இன்னும் நீக்கப்படவில்லை. இதனால் மெட்ரோ ரயில்களின் போக்குவரத்து துவங்கியும், பயணியருக்கு பயனில்லாத நிலை உள்ளது.பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனாவுக்கு முன், தினமும் காலை 6:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை இருந்தது. 2020 மார்ச்சில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாதக்கணக்கில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன்பின் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது என்றாலும், பயணியர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கொரோனாவுக்கு முன், தினமும் 5 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்தனர். தற்போது இந்த எண்ணிக்கை, 1.75 லட்சமாக குறைந்துள்ளது.இரவு ஊரடங்கு இன்னும் நீக்கப்படாததால், பயணியருக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மெட்ரோ ரயில் காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயங்குகிறது.மெட்ரோ ரயில் துவங்குவது தாமதமாவதால் வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து அதிகாலை வந்திறங்கும் பயணியருக்கு, மெட்ரோ ரயில் சேவை கிடைப்பதில்லை.அதே போன்று காலையில், விரைவில் அலுவலகம் செல்வோர், இரவு, 'ஷிப்ட்' பணி முடிந்து வீடு திரும்புவோர், பாதிக்கப்படுகின்றனர்.இரவு ஊரடங்கு அமலில் உள்ளதால், எங்களால் மெட்ரோ ரயில் சேவையை விஸ்தரிக்க முடியவில்லை. ஊரடங்கு நீக்கப்பட்டால், மெட்ரோ ரயில் போக்குவரத்து நேரத்தை விஸ்தரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X