பொது செய்தி

இந்தியா

பள்ளிகளின் மீது செல்லும் மின்சார கம்பிகளை அகற்றுங்கள்; உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 08, 2021
Share
Advertisement
பெங்களூரு : மாநில பள்ளிகளின் வளாகத்தை கடந்து செல்லும் அனைத்து மின்சார கம்பிகளை அப்புறப்படுத்தும்படி கர்நாடக உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.துமகூரின் கரிகரே பள்ளியில், ஆகஸ்ட் 15ல் கொடி கம்பத்தை நிறுத்தும் போது, மின் கம்பி மீது பட்டதில், மின்சாரம் பாய்ந்து சந்தன் 16, என்ற மாணவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து, பொது நலன் மனு

பெங்களூரு : மாநில பள்ளிகளின் வளாகத்தை கடந்து செல்லும் அனைத்து மின்சார கம்பிகளை அப்புறப்படுத்தும்படி கர்நாடக உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

துமகூரின் கரிகரே பள்ளியில், ஆகஸ்ட் 15ல் கொடி கம்பத்தை நிறுத்தும் போது, மின் கம்பி மீது பட்டதில், மின்சாரம் பாய்ந்து சந்தன் 16, என்ற மாணவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து, பொது நலன் மனு தாக்கல் செய்து கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.சம்பவம் குறித்து உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கையளித்த துமகூரு மாவட்ட கலெக்டர், மாணவர்கள் தாங்களாக முன் வந்து, கொடியேற்றியதாக குறிப்பிட்டிருந்தார்.இம்மனு குறித்து, நேற்று முன் தினம் விசாரணை நடந்த போது, தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா கூறியதாவது:மாவட்ட கலெக்டரின் அறிக்கையை ஏற்க முடியாது. பொதுவாக ஆசிரியர்களின் உத்தரவுபடி மாணவர்கள் கொடியேற்றியிருப்பர். மாவட்ட கலெக்டர் அறிக்கையை கவனித்தால், அவர் பள்ளி ஊழியர்களுக்கு ஆதரவாக வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக தோன்றுகிறது.

பள்ளி முதல்வர் அல்லது ஆசிரியர்கள் உத்தரவில்லாமல், மாணவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள்.அனைத்து பள்ளி வளாகங்களில் கடந்து செல்லும் மின் கம்பிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.மின் விபத்தில் இறந்த மாணவரின் குடும்பத்தினருக்கு, அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். 2019ல் கொப்பாலின் விடுதியில், கொடியேற்றும் போது, மின்சாரம் பாய்ந்து ஐந்து மாணவர்கள் இறந்தனர்.அப்போது ஒவ்வொரு மாணவரின் குடும்பத்துக்கும், தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. இப்போது வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறுவது துரதிருஷ்டவசம்.இச்சம்பவத்தில், காயமடைந்தவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X