பொது செய்தி

இந்தியா

பாஜ., ம.ஜ.த., கைகோர்ப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''நடந்த முடிந்த மூன்று மாநகராட்சி தேர்தலில் பெலகாவியில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ., கலபுரகியில் ம.ஜ.த.,வுடன் கைகோர்த்து ஆட்சியை பிடிக்க உளளது. இதற்கான நடவடிக்கையில் அப்பகுதியை சேர்ந்த இரு கட்சிகளின் தலைவர்கள் ஆலோசிப்பர்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில், பெலகாவியை முதன் முறையாக பா.ஜ., கைப்பற்றியுள்ளது.

பெங்களூரு : ''நடந்த முடிந்த மூன்று மாநகராட்சி தேர்தலில் பெலகாவியில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ., கலபுரகியில் ம.ஜ.த.,வுடன் கைகோர்த்து ஆட்சியை பிடிக்க உளளது.

இதற்கான நடவடிக்கையில் அப்பகுதியை சேர்ந்த இரு கட்சிகளின் தலைவர்கள் ஆலோசிப்பர்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில், பெலகாவியை முதன் முறையாக பா.ஜ., கைப்பற்றியுள்ளது. ஹுப்பள்ளி - தார்வாடில் சுயேச்சைகளுடன் ஆட்சியை பிடிக்க பா.ஜ., முயற்சிக்கிறது.அதேபோன்று, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கலபுரகியில், ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ., காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், பெங்களூரில் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:கலபுரகியில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைப்பது தொடர்பாக அவர்களுடன் நீண்ட நேரம் விவாதிக்கவில்லை. ஒன்றாக செல்லலாம் என்று மட்டுமே கூறினேன்.அவர்கள், அப்பகுதி தலைவர்களுடன் பேசி, முடிவெடுப்பர். கலபுரகி மாநகராட்சியை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கைப்பற்றும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X