பொது செய்தி

இந்தியா

விநாயகர் சிலைகள் வாடகைக்கு

Added : செப் 08, 2021
Share
Advertisement
பெங்களூரு : வீடு, வாகனம், நகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் வாடகைக்கு கிடைப்பது சகஜம். தற்போது விநாயகர் சிலைகளும் வாடகைக்கு கிடைக்கின்றன. விநாயகர் சிலைகளையும் நாள் வாடகைக்கு பெறலாம். பூஜை முடிந்த பின், திரும்ப கொடுத்துவிடலாம்.செப்டம்பர் 10ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவுவதால், பல கட்டுப்பாடுகளுடன், சதுர்த்தி கொண்டாட அரசு

பெங்களூரு : வீடு, வாகனம், நகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் வாடகைக்கு கிடைப்பது சகஜம். தற்போது விநாயகர் சிலைகளும் வாடகைக்கு கிடைக்கின்றன.

விநாயகர் சிலைகளையும் நாள் வாடகைக்கு பெறலாம். பூஜை முடிந்த பின், திரும்ப கொடுத்துவிடலாம்.செப்டம்பர் 10ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவுவதால், பல கட்டுப்பாடுகளுடன், சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதியளித்துள்ளது.பெங்களூரு ஆர்.வி.சாலையில், 'விநாயகா அண்ட் கோ' என்ற நிறுவனம் உள்ளது. இங்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, விநாயகர் சிலைகள் வாடகைக்கு கிடைக்கின்றன.கடை உரிமையாளர் சீனிவாஸ் கூறியதாவது:சுற்றுச்சூழலுக்கு தகுந்த சிலைகளுடன், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளும் கூட, வாடகைக்கு அளிக்கப்படும். 5 - 12 அடி வரையிலான உயரத்தில், சிலைகள் வாடகைக்கு கிடைக்கும்.நாங்கள் 75 ஆண்டுகளாக, விநாயகர் சிலை தயாரித்து, விற்பனை செய்யும் தொழிலை செய்கிறோம்.பொது மக்கள், சிலைகள் தேவைப்படும் போது, இங்கு வந்து சிலைகளை பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம். 75 சதவீதம் பணத்தை கொடுத்து சிலையை பெற்று செல்லலாம்.

நாள் கணக்கில் வாடகைக்கு பெறலாம்.சதுர்த்தி கொண்டாடிய பின், சிலைகளை திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கலாம். அவர்கள் கொடுத்திருந்த பணத்தில், பாதி பணம் திருப்பி கொடுக்கப்படும்.இதனால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை. மக்களுக்கும் சுமையாக இருக்காது. வியாபாரிகளுக்கும் உதவியாக இருக்கும்.'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' ரசாயத்தால் தயாரிக்கப்படும் சிலைகளை, அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடை விதிப்பதற்கு முன்பே, தயாரிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிலைகள் விற்பனையாகாமல் உள்ளன.இந்த சிலைகளை வாடகைக்கு விட, முடிவு செய்துள்ளோம். சிலைகளை கரைப்பது சம்பிரதாயம் என்பதால், பலரும் வாடகை விநாயகர் சிலையுடன், ஒரு குட்டி மண் விநாயகர் சிலையையும் கொண்டு செல்ல வேண்டும். அதை பூஜித்து பின் கரைக்கலாம்.வாடகைக்கு எடுத்திருந்த சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X