பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சிலைகள் விற்பனை துவக்கம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை விற்பனை துவங்கியுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி பொது இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.இந்தாண்டு, கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அரசு தடை
 விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சிலைகள் விற்பனை துவக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை விற்பனை துவங்கியுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி பொது இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.இந்தாண்டு, கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அரசு தடை விதித்துள்ளது. வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய அறிவுறுத்தி உள்ளது. வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும் வகையில், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.சதுர்த்தி விழாவுக்கு இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால், விநாயகர் சிலைகள் விற்பனை துவங்கியுள்ளது. பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு நகராட்சி அலுவலகம் அருகே மற்றும் பல்வேறு இடங்களிலும், தள்ளு வண்டிகளில் வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் விற்பனை நடக்கிறது. 200 - 500 ரூபாய் வரை உள்ளது.விற்பனையாளர்கள் கூறுகையில், 'பெரிய சிலைகள் தயாரிக்கவில்லை; வீடுகளில் வழிபாடு செய்யும் வகையில் மட்டுமே சிலைகள் விற்கின்றோம். இந்தாண்டு விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X