பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா 'டெஸ்ட்': இரு நாட்களில் 'ரிப்போர்ட்' கொடுக்க தீவிரம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகள் கடந்த, 1ம் தேதி திறக்கப்பட்டன. ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையான, மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வருகின்றனர்.கல்லுாரிகள் வழக்கம்போல செயல்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து
 ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா 'டெஸ்ட்': இரு நாட்களில் 'ரிப்போர்ட்' கொடுக்க தீவிரம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகள் கடந்த, 1ம் தேதி திறக்கப்பட்டன. ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையான, மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வருகின்றனர்.கல்லுாரிகள் வழக்கம்போல செயல்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு ஏதாவது கொரோனா அறிகுறி உள்ளதா என, நகராட்சி சுகாதாரத்துறை வாயிலாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.அதில், பொள்ளாச்சி அரசு கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி சுகாதாரத்துறை வாயிலாக, கல்லுாரியில், மொத்தம், 300 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா அறிகுறி தென்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களை கண்டறியும் வகையில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள், பொதுமக்களிடம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.ஆனைமலைஆனைமலை ஒன்றியத்திலுள்ள, ஏழு உயர்நிலை மற்றும், ஏழு மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பரவலை தடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக ஆனைமலை ஒன்றியத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியபோது மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி உயர்நிலைப்பள்ளிகள், திவான்சாபுதுார் மேல்நிலைப்பள்ளியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆசிரியர்கள், மாணவர்கள், என, 80 பேரிடம் சளி மாதிரி சேகரித்ததில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறையினர் மாதிரி சேகரித்து, தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர்.வால்பாறைவால்பாறையில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில், நேற்று கொரோனா 'டெஸ்ட்' எடுக்கப்பட்டது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வால்பாறையில் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் பரிசோதனை முடிவு தெரியும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X