சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு வழங்காத கோவை அரசு பஸ் ஜப்தி

Added : செப் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல்லில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.நத்தம் ரெட்டியப்பட்டி அருகே புதுக்கோட்டை கூலித்தொழிலாளி கருப்பணன் 42. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை செஞ்சேரிமலை பகுதியில் தங்கிவேலை பார்த்தார்.கடந்த 2014ல் ஆக.14ம்தேதி மிதிவண்டியில் வீடு திரும்பும் போது அரசு பஸ் மோதி சம்பவ இடத்தில்

திண்டுக்கல் : விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல்லில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

நத்தம் ரெட்டியப்பட்டி அருகே புதுக்கோட்டை கூலித்தொழிலாளி கருப்பணன் 42. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை செஞ்சேரிமலை பகுதியில் தங்கிவேலை பார்த்தார்.கடந்த 2014ல் ஆக.14ம்தேதி மிதிவண்டியில் வீடு திரும்பும் போது அரசு பஸ் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இவரது மனைவி பாக்கியம், மகள் முத்துலட்சுமி, மகள் ரஞ்சித் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரித்த நீதிபதி சரவணன், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கருப்பணனின் குடும்பத்துக்கு ரூ.14 லட்சத்து 16 ஆயிரத்து 992 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

இதுநாள் வரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.கோவை மண்டலத்திற்கு உரிய பஸ் ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட் அமீனா, வக்கீல் சுந்தரமூர்த்தி ஆகியோர் பஸ்சை ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X