தமிழ்நாடு

நூறுசதவீத தடுப்பூசி இலக்கை எட்ட தீவிரம்!

Added : செப் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநகராட்சியாக திண்டுக்கல்லை மாற்ற திட்டமிட்டுள்ளனர். மாநகராட்சி 48 வார்டுகளில் மொத்தம் 2.50 லட்சம் பேர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநகராட்சியாக திண்டுக்கல்லை மாற்ற திட்டமிட்டுள்ளனர். மாநகராட்சி 48 வார்டுகளில் மொத்தம் 2.50 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ளவர்களுக்கும் செலுத்த, கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், வார்டு வாரியாக வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாற்றுத் திறனாளிகள், 80 வயதை கடந்தோருக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர். தற்போது அனைவருக்கும் இம்முறையில் செலுத்த உள்ளனர்.

முதற்கட்டமாக நேற்று (செப்.7) மரியநாதபுரம் நகரஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதார ஆய்வாளர்கள் துவங்கினர். இப்பணியில் செவிலியர்கள் உட்பட 150 பேர் ஈடுபட்டுள்ளனர்.

கமிஷனர் சிவசுப்ரமணியன்: தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்கள் இப்போது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். இதை பயன்படுத்தி விரைவாக நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்த பணியை தீவிரமாக்கியுள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X