திண்டுக்கல் : திண்டுக்கல், பழநியில் பா.ஜ., சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதம் அனுப்பினர்.
கொரோனாவால் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பா.ஜ.,வினர், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மாற்று மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி விழாவை விடுமுறை தின வாழ்த்து என்கிறார்.
எனவே பா.ஜ., வினர் அவருக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதங்களை அனுப்ப வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.நேற்று திண்டுக்கல் தபால் நிலையத்தில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் அக்கட்சியினர் முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதம் அனுப்பினர். பழநி-: பழநி பா.ஜ.,வினர் மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையில் விநாயகர் சதுர்த்தி காண வாழ்த்தை போஸ்ட் கார்டு அனுப்பி போராட்டத்தை துவங்கினர்.
கனகராஜ் தெரிவித்ததாவது: ஹிந்துவான முதல்வர் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை. எனவே மாநில தலைமை கூறியபடி, வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்பும் போராட்டத்தை நடத்துகிறோம்'' என்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, நகர தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE