தேனி : ஸ்ரீரெங்கபுரம் பள்ளித்தெரு இன்ஜினியர் சதீஷ்குமார் 29. இவர் நண்பர்களுடன் 2009ல் ஊராட்சியின் மைதானத்தில் 22 மரக்கன்றுகளை நட்டு பராமரித்தனர். 12 மரங்கள் செழிப்பாக வளர்ந்தன. ஜூலை 8 ல், மின்சார வழித்தடத்திற்கு இடையூறு என ஊராட்சி நிர்வாகம் கிளை வெட்ட அனுமதி அளித்தது. ஆனால் அங்கிருந்த 5 மரங்கள் வெட்டப்பட்டன.
ஊராட்சியில் முறையான பதில் இல்லை. எஸ்.பி.,யிடம் வழங்கிய புகாருக்கு நடவடிக்கை இல்லை.ஜூலை 15ல் சதீஸ்குமார், தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணை முடிந்து பொது சேவை பயன்பாட்டிற்கான நிரந்தர தீர்ப்பாயத்தின் நீதிபதி முகமதுஜியாவுதீன், அவசியம் இன்றி மரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டும். வெட்டப்பட்ட 5 மரங்களுக்கு ஈடாக ஊராட்சி நிர்வாகம் 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதுடன், தாடிச்சேரி வி.ஏ.ஓ., உறுதிப்படுத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
உத்தரவை நிறைவேற்றும் விதமாக நேற்று மைதானத்தில் 10 மரங்கன்றுகளும், வெங்கடாசலபுரம் ரோட்டில் 90 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை வி.ஏ.ஓ., ராமச்சந்திரன் , ஊராட்சித் தலைவர் பெருமாள், எழுத்தர் சுருளி முன்னிலையில் வீடியோ மூலம் பதிவு செய்து அறிக்கை தயார் செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE