தடுப்பூசி போடலேன்னா... கடையின் உரிமம் ரத்தாயிடும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போடலேன்னா... கடையின் உரிமம் ரத்தாயிடும்

Added : செப் 08, 2021
Share
சூலுார்:சூலுார் பேரூராட்சியில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளில், ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.சூலுார் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் உரிமையாளர்கள், கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என, பேரூராட்சி ஊழியர்கள்

சூலுார்:சூலுார் பேரூராட்சியில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளில், ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.சூலுார் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் உரிமையாளர்கள், கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என, பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.சூலுார் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், கட்டாயம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும். பேரூராட்சி ஊழியர்கள் கடைகளுக்கு ஆய்வுக்கு வரும்போது, தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றுகளை காண்பிக்க வேண்டும்.இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடையின் விற்பனை மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும். அதனால், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X