பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உணவில் சத்து; 'பாஸ்ட் புட்'ல் சக்கை

Added : செப் 08, 2021
Share
Advertisement
சூலுார்:''உடலுக்கு உறுதி தரும் இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும். உடலை உருக்குலைக்கும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்,'' என, விழிப்புணர்வு பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், இம்மாதம் முழுக்க 'போஷான் அபியான்' எனும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடக்கிறது. காய்கறி தோட்டம் அமைத்தல், சிறு தானியங்களை கொண்டு, ஊட்டச்சத்து
 இயற்கை உணவில் சத்து; 'பாஸ்ட் புட்'ல் சக்கை

சூலுார்:''உடலுக்கு உறுதி தரும் இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும். உடலை உருக்குலைக்கும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்,'' என, விழிப்புணர்வு பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், இம்மாதம் முழுக்க 'போஷான் அபியான்' எனும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடக்கிறது. காய்கறி தோட்டம் அமைத்தல், சிறு தானியங்களை கொண்டு, ஊட்டச்சத்து உணவு பொருட்கள் தயாரித்தல், கர்ப்பிணி பெண்கள், இளம் பாலுாட்டும் தாய்மார்கள், வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை பேண, கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒரு பகுதியாக, சூலுார் வட்டாரத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சோமனுார் ஆரம்ப சுகாதார நிலைய நேச்சரோபதி டாக்டர் அருள் ஜோதி பேசியதாவது:உடலுக்கும், உள்ளத்துக்கும் வலிமை தரும் பிரணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். உடலுக்கு பயிற்சிகள் என்பது அவசியம். கருப்பை பலமுள்ளதாக மாற, எளிய யோகாசன பயிற்சிகளை பெண்கள் செய்யவேண்டும். உடலுக்கு உறுதி தரும் சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் உட்பட இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலை உருக்குலைக்கும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை தேடிச்சென்று உண்ண வேண்டும். தெருவில் விற்கும் சுகாதாரமற்ற பொருட்களை புறக்கணிக்கவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சூலுார் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சம்யுக்தா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X