பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில் 'இனிப்பு' சாகுபடி நிவர்த்தியானது சந்தேகம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி கிராமத்தில், விவசாயிகளுக்கான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை 'அட்மா' திட்டத்தின் சார்பாக, பிளிச்சி கிராமத்தில் உள் மாவட்ட அளவிலான, 'நீடித்த நவீன செம்மை கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில்,

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி கிராமத்தில், விவசாயிகளுக்கான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை 'அட்மா' திட்டத்தின் சார்பாக, பிளிச்சி கிராமத்தில் உள் மாவட்ட அளவிலான, 'நீடித்த நவீன செம்மை கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில், ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா துவக்கி வைத்தார். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாலதி, அருண் ஆகியோர் கரும்பு தொழில்நுட்பம் குறித்து பேசினர்.கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், அகலப்பாத்தி அமைத்தல், விதை கரணை உரம் கொண்டு விதை நேர்த்தி செய்தல், தொழு உரமிடுதல் பற்றியும், கரும்பில் நோய் தாக்குதல், வேர் தாக்குதல், சாம்பல் நோய் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், களை மேலாண்மை, நீர் மேலாண்மை குறிப்பாக, கரும்பிற்கு சொட்டுநீர் அமைத்தல் குறித்து விளக்கப்பட்டது.பண்ணாரி அம்மன் கரும்பு நிறுவனத்திலிருந்து, விவசாயிகளுக்கு வழங்கும் நடவு மானியம் குறித்து, ஒரு பரு நாற்றுக்கள் குறித்தும், ஈஸ்வரமூர்த்தி எடுத்து கூறினார்.வேளாண்மை உதவி அலுவலர் ஜனனி, அனுராதா ஆகியோர் பங்கேற்றனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை, 'அட்மா' உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கமணி, புனிதா ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X