பொது செய்தி

தமிழ்நாடு

சிலை வைக்க தனி நபருக்கு மட்டுமே அனுமதி: கண்டிஷன் போட்டார் கலெக்டர்

Added : செப் 08, 2021
Share
Advertisement
'தனி நபர்கள் தங்கள் இல்லங்களில், விநாயகர் சிலை வைத்து வழிபடலாம். நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம். அமைப்புகள் இச்செயலை செய்வதற்கு அனுமதி இல்லை' என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கலெக்டர்

'தனி நபர்கள் தங்கள் இல்லங்களில், விநாயகர் சிலை வைத்து வழிபடலாம். நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம். அமைப்புகள் இச்செயலை செய்வதற்கு அனுமதி இல்லை' என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டு நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, பொது இடங்களில் சிலை நிறுவுவது, பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி கிடையாது. சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இந்த விழாக்களை பொதுமக்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடலாம்.இல்லங்களில் தனி நபர்கள் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகேயுள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி உண்டு. அமைப்புகள் இச்செயலில் ஈடுபட அனுமதி இல்லை.
தனி நபர்கள், தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட சிலைகளை ஆலயத்தின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த வழிமுறைகளை மீறுவோர் மீது, தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, இந்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் சமீரன் பேசினார்.மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், எஸ்.பி., செல்வநாகரத்தினம், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X