பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ, மாணவியரின் பெற்றோருக்கும் தடுப்பூசி கட்டாயம்! முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

Added : செப் 08, 2021
Share
Advertisement
மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, பெற்றோர் தடுப்பூசி போட்டுள்ளதை உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. பள்ளி திறந்த சில தினங்களிலே அரியலுார், நாமக்கல் மாவட்டங்களை தொடர்ந்து, கோவையிலும், ஒன்பது, பத்தாம்

மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, பெற்றோர் தடுப்பூசி போட்டுள்ளதை உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. பள்ளி திறந்த சில தினங்களிலே அரியலுார், நாமக்கல் மாவட்டங்களை தொடர்ந்து, கோவையிலும், ஒன்பது, பத்தாம் வகுப்புகளை சேர்ந்த, மூன்று மாணவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுல்தான் பேட்டை, அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த, இம்மூன்று மாணவர்களுக்கும், லேசான அறிகுறிகள் இருப்பதாக, மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. உடல் வெப்பநிலை சீராக இருந்தும், பரிசோதித்ததில் தொற்று இருப்பது உறுதியானதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இதைத்தொடரந்து, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், பள்ளிக்குள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த செயல்முறைகள் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சமூக இடைவெளி பின்பற்றுவதோடு, அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகளை பின்பற்ற வேண்டும், தினசரி உடல்வெப்பநிலை சரிபார்ப்பதோடு, சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறும் முன், சுகாதாரத்துறைக்கு தெரிவித்து, அவசரகால நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:கோவை மாவட்டத்தில், 646 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் தற்போது செயல்படுகின்றன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டுமே, தற்போது பள்ளிக்கு வருகை புரிகின்றனர். பள்ளி வளாகத்தில் இருப்போரால், தொற்று பரவும் வாய்ப்புகள் குறைவு.எனவே, மாணவர்களின் பெற்றோரும் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதி செய்யுமாறு தெரிவித்துள்ளேன். தடுப்பூசி போடாதவர்களை விரைவில் போட வலியுறுத்த வேண்டுமென, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மட்டுமே, தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். பள்ளிக்குள் பின்பற்றும் நடைமுறைகளை, அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X