சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சான்றிதழ் வழங்க கோரி கல்லுாரி முற்றுகை

Added : செப் 08, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை அருகே வான்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரி நிர்வாகம் சான்றிதழ் வழங்க கோரி மாணவிகள் முற்றுகையிட்டனர்.மானாமதுரை அருகே வான்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி.,4 ஆண்டு பட்ட படிப்பில் முதலாம் ஆண்டு படித்த 6 மாணவிகள்,கல்லுாரி நிர்வாகத்திற்கு எதிராகசென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பின்படி,மாற்றுச்

மானாமதுரை : மானாமதுரை அருகே வான்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரி நிர்வாகம் சான்றிதழ் வழங்க கோரி மாணவிகள் முற்றுகையிட்டனர்.

மானாமதுரை அருகே வான்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி.,4 ஆண்டு பட்ட படிப்பில் முதலாம் ஆண்டு படித்த 6 மாணவிகள்,கல்லுாரி நிர்வாகத்திற்கு எதிராகசென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பின்படி,மாற்றுச் சான்றிதழ்,மதிப்பெண் சான்றிதழ் பெற வந்தனர். கல்லூரி நிர்வாகம் சான்றிதழ், நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து, தங்களது பெற்றோருடன் கல்லுாரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர்.

மானாமதுரை தாசில்தார் தமிழரசன் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு மாற்றுச்சான்றிதழ் மற்றும் முந்தைய அசல் சான்று வழங்கப்பட்டும், ஏனைய சான்று, நிலுவைத்தொகைக்கு அவகாசம் வழங்க ஒத்துகொண்டதை அடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X