பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சறுக்கினதே சாக்கு!மாநகராட்சி தேர்தல்ல 'கை' கட்சி தோல்வி அடைஞ்சிருப்பதாலே 'மாஜி' சி.எம்., பேர்ல பழி போடுறாங்களாம்.ஆட தெரியாதவரு மேடை சரியில்லன்னு சொன்னது போல, ஜெயிக்க செல்வாக்கு இல்லாத இடத்தில 'கை' கட்சி ஏன் தோற்றதுன்னு தலையை பிச்சிக்கிறாங்களாம்.'மாஜி' முதல்வரு பிரச்சாரத்துக்கு வராம, அவரு, ஆயுர்வேத மசாஜ் செய்ய போயிட்டாரு. சரியான ஒர்க் அவுட் இல்லை. அதனாலேயே

சறுக்கினதே சாக்கு!மாநகராட்சி தேர்தல்ல 'கை' கட்சி தோல்வி அடைஞ்சிருப்பதாலே 'மாஜி' சி.எம்., பேர்ல பழி போடுறாங்களாம்.ஆட தெரியாதவரு மேடை சரியில்லன்னு சொன்னது போல, ஜெயிக்க செல்வாக்கு இல்லாத இடத்தில 'கை' கட்சி ஏன் தோற்றதுன்னு தலையை பிச்சிக்கிறாங்களாம்.'மாஜி' முதல்வரு பிரச்சாரத்துக்கு வராம, அவரு, ஆயுர்வேத மசாஜ் செய்ய போயிட்டாரு. சரியான ஒர்க் அவுட் இல்லை.

அதனாலேயே சரிவு ஏற்பட்டதாக, மாநிலத் தலைவரு பழி போடுறாராம். அவங்க மேலிடத்துக்கு புகார் செய்யப் போறாராம்.நானில்லை என்றால், என்னாகும்னு தெரிஞ்சிக்கனும்னு, ரெஸ்ட் எடுத்து நிரூபிச்சிருப்பதா 'மாஜி' முதவ்வரு திருப்தி அடைஞ்சிருக்காராம்.'மாஜி' உறவுக்கு கத்திரி!ஹுப்பள்ளி -- தார்வாடை சேர்ந்த 'மாஜி' முதல்வரோட நெருக்கமா இருந்த சி.எம்., தற்போது, சென்ட்ரல் மைன்ஸ் மினிஸ்டரோடு நெருக்கமாகிட்டாரு.தன்னோட பதவிக்கு ஆபத்து வராமல் மேலிடத்தில் பலம் சேர்க்க ஆள் பிடித்து விட்டாராம். 'மாஜி' சி.எம்., உறவுக்கு 'கத்திரி' போட்டிருக்காராம்.மத்திய உள்துறை மந்திரி வந்து போன பின், அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு ஆளுங் கட்சியில் தலைமை ஏற்கும் பொறுப்பு விவகாரத்தில்,

சீனியர்களிடம் இருந்து மிளகாய் கடித்தது போல காரம் ஏறியிருக்கு.மந்திரி பதவியே வேணாம்னு உதறி தள்ளிய 'மாஜி', தன்னோட வேலையை துவங்கி இருக்கிறாராம்.'கிவ் அண்டு டேக்' பாலிசி!தற்போதைய முதல்வரை, அண்மையில் 'மாஜி' முதல்வரு தன் எம்.எல்.சி.,க்களுடன் போய் சந்திச்சாரு.ரெண்டு பேருமே ஜனதா பரிவாரை சேர்ந்த பழைய பாசக்காரங்க. எதை எதிர்ப்பார்த்து சந்திக்க சென்றாரோ அதை செய்து தர 'டீல்' ஓ.கே. ஆகியிருக்கு.அதே வேளையில், மாநகராட்சி அதிகாரத்தை பிடிக்க இழுபறியாக உள்ள இடத்திற்கு முதல்வர் ஆதரவு கேட்டிருக்காரு. அதற்கு புல்லுக்கட்டுக்காரரு ஒப்புதல் அளித்து விட்டாராம்.'கிவ் அண்டு டேக்' பாலிசி 'ஓகே.', ஆகியுள்ளதாம்.தப்பு கணக்கு!தாலுகா, மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு எல்லை மறுவரை செய்யப்போறாங்களாம்.

இதை காரணம் காட்டி, இப்போதைக்கு இதன் எலக் ஷனை தாமதப்படுத்தப்போறாங்களாம். இது தப்புக்கணக்கா மாறப்போகுதாம்.தாலுகா, மாவட்ட பஞ்சாயத்துகளில் போட்டியிட தயாரா இருக்கும் ஆளுங்கட்சிக்காரங்க வெறுப்பில் இருக்காங்க. பெரிய அதிகாரத்தில் இருப்பவங்க, சின்ன தேர்தலை நடத்தாம, தேவையில்லாம தாமதப்படுத்த இது ஒரு வாய்ப்பாக காலத்தை ஓட்டுறாங்க.இதனாலே ஆளுங்கட்சி மீது பொது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட எதிர்க்கட்சிக் காரங்க பலத்தை அதிகரிக்க எகதாளம் பேசுறாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X