அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு சீரமைப்பு கட்டாயம்!| Dinamalar

தமிழ்நாடு

அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு சீரமைப்பு கட்டாயம்!

Added : செப் 08, 2021
Share
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை செப்.27 க்குள் சீரமைப்பு செய்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆட்சி காலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அரசு கட்டடங்களில் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.பள்ளிகள், ஒன்றிய அலுவலகங்கள்,ஊராட்சி அலுவலகங்கள் மற்றும்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை செப்.27 க்குள் சீரமைப்பு செய்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அரசு கட்டடங்களில் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.பள்ளிகள், ஒன்றிய அலுவலகங்கள்,ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் பொதுப்பயன்பாட்டுக்காககட்டப்பட்ட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்புதிட்டம் செயல்படுத்தப்பட்டது. நாளடைவில்பராமரிப்பு பணி செய்யப்படாமல்கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு கட்டடங்களில்மட்டும் அல்லாது தனியார் கட்டடங்களில் கூட முறையான பராமரிப்புஇல்லாததால் மழை நீர் சேகரிப்பு திட்டம் வீணானது. தற்போதுவடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில்அரசு கட்டடங்களில் உள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்பினை சீரமைத்துமீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசுத்துறைஅதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.கு

றிப்பாக பொதுப்பணித்துறை, மருத்துவபொதுப்பணித்துறை, ஊரட்சிகளின் உதவி இயக்குநர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்,நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முதன்மை கல்விஅலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. சீரமைப்பு செய்து மழை நீர் சேகரிப்புதொட்டிகள் செயல்பாடு குறித்து செப்.27 க்குள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X