பொது செய்தி

தமிழ்நாடு

மலம்பட்டி வாழை சந்தைக்குவரத்து குறைவு: விலையோ உயர்வு

Added : செப் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மலம்பட்டி வாழை சந்தைக்கு வாழைத்தார்கள் வரத்து குறைந்து விலையோ உயர்ந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வாரம் தோறும் செவ்வாய், வெள்ளியன்று மலம்பட்டியில் வாழை சந்தை நடக்கும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் வாழை தார்களை கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்வார்கள். கொரோனாதொற்று பரவல் காரணமாக வாழை விலை சரிவு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மலம்பட்டி வாழை சந்தைக்கு வாழைத்தார்கள் வரத்து குறைந்து விலையோ உயர்ந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாரம் தோறும் செவ்வாய், வெள்ளியன்று மலம்பட்டியில் வாழை சந்தை நடக்கும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் வாழை தார்களை கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்வார்கள். கொரோனாதொற்று பரவல் காரணமாக வாழை விலை சரிவு ஏற்பட்டு மிகவும் குறைவான விலைக்குதான் விற்பனை செய்யப்பட்டு வந்தது.தற்போது விநாயகர் சதுர்த்தி விழா, முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் அச்சத்திலிருந்து மக்கள் விடுபட்டு சராசரி வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மேலுார், சுக்காம்பட்டி, சூரைக்குண்டு, வெள்ளூர் நாடு, கட்டக்காளைபட்டி, சாலுார், கூட்டுறவுப்பட்டி, சிவல்பட்டி, திருச்சி, கரூர் பகுதிகளில் இருந்து வாழை தார்கள் மலம்பட்டி சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. பெரிய அளவில் வாழை விளைச்சல் இல்லாததால் வரத்து குறைவாக இருந்தது. விலை கொரோனா நேரத்தில் பூவன் தார் 150 முதல் 200 ரூபாய் என்பது உயர்ந்து தற்போது 500 முதல் 700 வரை விற்பனை செய்யப்பட்டது.

நாட்டு ரகம் 50 முதல் 200 வரை இருந்தது 400 முதல் 450 ரூபாய் வரையும், சக்கை 40 முதல் 50 லிருந்து 200 முதல் 350 ரூபாய் வரையும், ரஸ்தாளி 100 முதல் 150 என்பது 300 முதல் 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.வாழை தார்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாழை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X