பொது செய்தி

இந்தியா

2 கோடி லஞ்சம், நடவடிக்கை எடுங்க; நீதிமன்றம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்க, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஊழல் ஒழிப்பு படைக்கு, 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசை, கர்நாடகா உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலா, சொத்து

பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்க, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஊழல் ஒழிப்பு படைக்கு, 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசை, கர்நாடகா உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், 2017ல் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார்.சிறையில் இருக்கும் போது அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக சிறை அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அப்போதைய டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.சசிகலா சிறையில் இருந்த போது, அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்திருந்தது.இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, ஏ.சி.பி., ஊழல் ஒழிப்பு போலீஸ் பிரிவில், 2018ல் புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் தொடர்ந்த வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையிலான முதன்மை அமர்வு முன் விசாரிக்கப்பட்டது;

ஆகஸ்ட் 25ல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையிலான முதன்மை அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதி கூறியதாவது:சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, சொகுசு வசதி செய்து கொடுத்த அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணராவ் (ஓய்வு), அப்போதைய பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் (ஹின்டல்கா சிறை தலைமை கண்காணிப்பாளராக உள்ளார்) ஆகிய இரு அதிகாரிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் அரசிடம் உரிய அனுமதி பெற்று, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும்.இவ்வாறு நீதிபதி எச்சரித்தார்.இந்நிலையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு, கர்நாடகா ஊழல் ஒழிப்பு படை தள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X