பொது செய்தி

இந்தியா

கட்சியை பலப்படுத்துவோம்; ம.ஜ.த., தலைவர் தேவகவுடா

Added : செப் 08, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''கர்நாடகாவில் மூன்று மாநகராட்சிகள் உட்பட உள்ளாட்சி தேர்தல் முடிவால் நாங்கள் மனம் தளரவில்லை. ஒற்றுமையுடன் இருந்து, கட்சியை பலப்படுத்துவோம்,'' என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்தார்.பெங்களூரில், ம.ஜ.த., அலுவலகத்தில் அவர் நேற்று கூறியதாவது:நான் அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, இனிப்பு, கசப்பை பார்த்துள்ளோம். மூன்று மாநகராட்சிகள் உட்பட உள்ளாட்சி

பெங்களூரு : ''கர்நாடகாவில் மூன்று மாநகராட்சிகள் உட்பட உள்ளாட்சி தேர்தல் முடிவால் நாங்கள் மனம் தளரவில்லை. ஒற்றுமையுடன் இருந்து, கட்சியை பலப்படுத்துவோம்,'' என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்தார்.

பெங்களூரில், ம.ஜ.த., அலுவலகத்தில் அவர் நேற்று கூறியதாவது:நான் அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, இனிப்பு, கசப்பை பார்த்துள்ளோம். மூன்று மாநகராட்சிகள் உட்பட உள்ளாட்சி தேர்தலில் தோற்றதால் நாங்கள் மனம் தளரவில்லை.மவுனமாக அமர மாட்டோம். கட்சியை பலப்படுத்துவதில், கவனம் செலுத்துவோம்.ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 - 50 ஆயிரம் வரை உறுப்பினர்கள் பதிவு செய்கின்றனர். கலபுரகி மாநகராட்சி தேர்தலில், நான்கு வார்டுகளில் வெற்றி பெறுவோம் என, எதிர்ப்பார்க்கவில்லை.முன்னாள் முதல்வர் குமாரசாமி அங்கு சென்று பிரசாரம் செய்தார். எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் தோற்றோம்; எத்தனை வார்டுகளில் 2வது இடத்தில் இருக்கிறோம் என்பதை ஆய்வு செய்கிறோம்.பெலகாவியில் எங்களின் சூழ்நிலை சரியில்லை. அங்கு பா.ஜ., பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரசை பற்றி பேச மாட்டேன்.ஹூப்பள்ளி -- தார்வாட் மாநகராட்சியில், மூன்று, நான்கு இடங்களை எதிர்ப்பார்த்தோம். ஒரு இடத்தில் வெற்றி பெற்றோம்.

சில இடங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளோம்.காங்கிரஸ் தலைவர்களுடன், சேர்ந்து கொண்டு ம.ஜ.த.,வின், 'இமேஜ்' பாதிக்கும்படி பேசிய, கோலார் எம்.எல்.ஏ., சீனிவாச கவுடா மீது, நடவடிக்கை எடுக்கும்படி, மாநில ம.ஜ.த., தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மற்றொரு எம்.எல்.ஏ., - ஜி.டி.தேவகவுடாவும் கூட, காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். தனக்கும், மகனுக்கும் டிக்கெட் தரும்படி சித்தராமையாவிடம் கேட்டுக்கொண்டார்.ஆனால், அவர் எங்கள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்படி, எப்போதும் பேசவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X