பொது செய்தி

தமிழ்நாடு

லெசிஸ் கால்வாயில் தண்ணீர் நிறுத்தம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாயில் லெசிஸ் கால்வாயில் பெயரளவிற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனக்கால்வாய் மூலம் 124 கண்மாய்கள் பயனடைந்து வருகிறது. இதில் கட்டாணிப்பட்டி 1,2 கால்வாய், 48 ம் மடைகால்வாய், ஷீல்டு கால்வாய், லெசிஸ் கால்வாய்,நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெற்று விவசாயம் நடந்து

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாயில் லெசிஸ் கால்வாயில் பெயரளவிற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனக்கால்வாய் மூலம் 124 கண்மாய்கள் பயனடைந்து வருகிறது. இதில் கட்டாணிப்பட்டி 1,2 கால்வாய், 48 ம் மடைகால்வாய், ஷீல்டு கால்வாய், லெசிஸ் கால்வாய்,நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெற்று விவசாயம் நடந்து வருகிறது.நேற்று முன் தினம் லெசிஸ் கால்வாய் பகுதிக்குதண்ணீர் திறக்கப்பட்டது. சில மணி நேரத்திலேயே உடனடியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த கால்வாய் மூலம் பயன் பெற்று வரும் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெரியாறு பாசன கால்வாயில் கடைமடைப்பகுதிகள் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் லெசிஸ் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையினர் பாசனப்பரப்புகளுக்கு ஏற்ப நீர் திறப்பினை முறைப்படுத்தி வழங்க வேண்டும், என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X