பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.92 கோடிக்கு தீர்வு; மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தகவல்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : 2021 ல் 2 முறை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 522 வழக்குகள் எடுக்கப்பட்டு 176 வழக்குகளுக்கு ரூ.1.92 கோடிக்கு தீர்வு காணப்பட்டது,'' என மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதிசாய் பிரியா தெரிவித்தார்.அவர் கூறியதாவது, உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஆண்டுக்கு 4 முறை தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்படும். 2021 ல் 2 முறை நடந்த லோக் அதாலத் மூலம் 176 வழக்குக்கு தீர்வு காணப்பட்டது. 3

சிவகங்கை : 2021 ல் 2 முறை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 522 வழக்குகள் எடுக்கப்பட்டு 176 வழக்குகளுக்கு ரூ.1.92 கோடிக்கு தீர்வு காணப்பட்டது,'' என மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதிசாய் பிரியா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஆண்டுக்கு 4 முறை தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்படும். 2021 ல் 2 முறை நடந்த லோக் அதாலத் மூலம் 176 வழக்குக்கு தீர்வு காணப்பட்டது. 3 வது முறையாக செப்.,11 ல் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்ட அளவில் உள்ள நீதிமன்றங்களில் 11 அமர்வுகளாக நடக்கும்.இதில், தலா இரண்டு நீதிபதிகள், ஒரு வழக்கறிஞர் இருந்து சமரச தீர்வு மூலம் வழக்கு முடித்து வைக்கப்படும். செப்., 11 ல் நடக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு 458 வழக்குகள் வரை வந்துள்ளன. விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, நில பிரிவினை, குடும்ப பிரச்னைகளுக்கு சமரச தீர்வு மூலம் உடனுக்குடன் தீர்வுபெற்று செல்லலாம்.வழக்கு செலவு இருக்காது. மேல்முறையீடும் தேவை இருக்காது.

செப்.,11 ல் அன்று காலை 10:00 மணிக்கு துவங்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று வழக்குகளுக்கு தீர்வு காணலாம், என்றார்.தேசிய மக்கள் நீதிமன்ற தலைவர் கே.கருணாநிதி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஆர். சத்தியதாரா, குடும்ப நல நீதிபதி ஜி. முத்துக்குமரன், போக்சோ' நீதிமன்ற நீதிபதி ஏ.கே., பாபுலால், மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஜி.சரத்ராஜ், தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் ஜி.சுதாகர், சார்பு நீதிபதி வி.சுந்தர்ராஜ், சார்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி, சிறப்புநீதிபதி எம்.உதயவேலவன், மாவட்ட முன்சீப் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி வி.பாரததேவி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X