சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டீக்கடை ஊழியர் கொலை; ஒருவர் கைது

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை:திருநெல்வேலி, சேரன்மாதேவியை சேர்ந்தவர் பாக்யராஜ், 40. இவர் கோவை, தடாகம் ரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, அங்குள்ள டீ கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த, 29ம் தேதி இரவு தடாகம் ரோட்டிலுள்ள ஒரு பேக்கரி முன் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரித்து பாக்யராஜின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.உறவினர்கள் பாக்யராஜை

கோவை:திருநெல்வேலி, சேரன்மாதேவியை சேர்ந்தவர் பாக்யராஜ், 40. இவர் கோவை, தடாகம் ரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, அங்குள்ள டீ கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த, 29ம் தேதி இரவு தடாகம் ரோட்டிலுள்ள ஒரு பேக்கரி முன் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரித்து பாக்யராஜின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.உறவினர்கள் பாக்யராஜை திருநெல்வேலி அழைத்து சென்று, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் கிடைத்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில், பாக்யராஜ் ரோட்டில் குடிபோதையில் மயங்கி கிடப்பதும், அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர், அவரை பேக்கரி முன் இழுத்து சென்று, ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு, தலையை சுவற்றில் மோதியதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த சாய்பாபாகாலனி போலீசார், தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வந்தனர்.விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணி(எ)ஜோசப், 62, என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூலி தொழிலாளியான அவரை, நேற்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X