பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லுக்கு காப்பீட்டு தொகை வரவில்லை: விவசாயிகள் குமுறல்

Added : செப் 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் 2020ல் பருவம் தவறிய மழையால் பல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்,மிளகாய் சேதமடைந்தது. காப்பீட்டுத்தொகை, மிளகாய்க்கு நிவாரணம் வரவில்லை என காணொலி காட்சி குறைதீர்ப்பு முகாமில் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமையில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வேளாண் இணை இயக்குனர்

ராமநாதபுரம் : மாவட்டத்தில் 2020ல் பருவம் தவறிய மழையால் பல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்,மிளகாய் சேதமடைந்தது. காப்பீட்டுத்தொகை, மிளகாய்க்கு நிவாரணம் வரவில்லை என காணொலி காட்சி குறைதீர்ப்பு முகாமில் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்

.ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமையில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் டாம்.பி. சைலஸ், துணை இயக்குனர் சேக் அப்துல்லா முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள்சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன், வைகைபாசன விவசாயிகள் சங்க தலைவர் கடலாடி வட்டாரத்தலைவர் பாக்கியநாதன் கடந்த ஜனவரி மழையில் பல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள், மிளகாய் செடிகள்சேதமடைந்தது. நெற்பயிர் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. காப்பீட்டுதொகை வழங்கவில்லை.மேலும் மிளகாய்க்கு நிவாரணம் வழங்க தோட்டக்கலைதுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனபுகார் கூறினர்.

இதேபோல திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் 2019, 2020--21 விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை மையம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். கலெக்டர் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X