டெண்டர் திறக்கப்படாத மார்க்கெட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெண்டர் திறக்கப்படாத மார்க்கெட்

Added : செப் 08, 2021
Share
பரமக்குடி : பரமக்குடி தினசரி மார்க்கெட் வளாகம் டெண்டர் விடப்பட்ட நிலையில், திறக்கப்படாமல் உள்ளதால் நகரில் நெரிசல் அதிகரித்து வருகிறது.வைகை ஆற்றின் கரையோரம் நகராட்சி சார்பில் தினசரி மார்க்கெட் வளாகம்கடந்த வருடம் கட்டப்பட்டது. இங்கு 24 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.2020 டிசம்பரில் கடைகளுக்கான டெண்டர் நகராட்சி சார்பில் விடப்பட்டன.டெண்டர் விடப்பட்ட வளாகம் இதுநாள் வரை

பரமக்குடி : பரமக்குடி தினசரி மார்க்கெட் வளாகம் டெண்டர் விடப்பட்ட நிலையில், திறக்கப்படாமல் உள்ளதால் நகரில் நெரிசல் அதிகரித்து வருகிறது.

வைகை ஆற்றின் கரையோரம் நகராட்சி சார்பில் தினசரி மார்க்கெட் வளாகம்கடந்த வருடம் கட்டப்பட்டது. இங்கு 24 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.2020 டிசம்பரில் கடைகளுக்கான டெண்டர் நகராட்சி சார்பில் விடப்பட்டன.டெண்டர் விடப்பட்ட வளாகம் இதுநாள் வரை ஒப்படைக்கப்படாமல் உள்ளதால் கடைகளை திறக்க முடியாமல் உள்ளனர்.

மேலும் நகரில் உள்ள தெருக்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றினால் மட்டுமே இந்த வளாகத்தில் கடைகள் செயல்பட முடியும் என்கின்றனர், டெண்டர் எடுத்தவர்கள்.ஆகவே பரமக்குடி நகராட்சி பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் நோக்கில், உடனடியாக மார்க்கெட் வளாகத்தில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X